தமிழக அரசு சுயவேலைவாய்ப்பினை உருவாக்கும் நோக்கத்தின் அடிப்படையில் விளிம்பு நிலையில் உள்ள மக்களின் நலனுக்காகவும், குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காகவும்; பல்வேறு துறைகளுடன் ஒருங்கிணைந்து வங்கிகளின் ஒத்துழைப்போடு கடன் வசதியாக்க முகாமினை ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி அரசு துறைகளான மாவட்ட தொழில் மையம், மகளிர் திட்டம், கூட்டுறவுத்துறை, வேளாண்மைத்துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, கைத்தறி துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் , மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம், ஆதிதிராவிட நலத்துறை அலுவலகம், தாட்கோ, மீன்வளத்துறை ஆகியவற்றினால் செயல்படுத்தப்படும் திட்டங்களின் வாயிலாக கடன் வழங்க அனைத்து வங்கிகளையும் இணைத்து மாபெரும் கடன் வசதியாக்க முகாம் அரியலூர் மாவட்டத்தில் 22.02.2024 அன்று மு.ப 10.30 மணியளவில்; மாவட்ட ஆட்சியர் அலுவலக பிரதான கூட்டரங்கில் நடத்த மாவட்ட ஆட்சியரால் திட்டமிடப்பட்டுள்ளது.
மாவட்ட தொழில் மையம், மகளிர் திட்டம், கூட்டுறவுத்துறை, வேளாண்மைத்துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை கைத்தறி துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம், ஆதிதிராவிட நலத்துறை அலுவலகம்,தாட்கோ, மீன்வளத்துறை ஆகிய துறைகளின் திட்டங்களில் பயனடைந்த பயனாளிகளும் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளார்கள். மாவட்ட ஆட்சித் தலைவரால் காசோலை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளது. மேலும், இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெற ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் தங்களது பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம்-2, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மாற்றுச்சான்றிதழ் (தகுதியிருப்பின்) ஆகியவற்றின் நகலினை முகாம் நடைபெறும் நாளன்று எடுத்து வருமாறும், தங்களுக்கு ஆர்வமுள்ள துறைகளின் கீழ் பதிவு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களைப் பெற பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், வாலாஜாநகரம், அரியலூர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04329-228555, 8925533925, 8925533926 ஆகிய தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொண்டு விவரங்களை பெற்று பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.