தஞ்சாவூர் உழவர் சந்தைக்கு ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதியில் இருந்து தக்காளி அதிகளவில் விற்பனைக்காக கொண்டுவரப்படும். அதன்படி தற்போது தக்காளி அதிக விளைச்சல் காரணமாக தினமும் 10 முதல் 15 லாரிகளில் மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படுகிறது.
இந்த வரத்து அதிகரிப்பின் காரணமாக தக்காளியின் விலை வீழ்ச்சி கண்டுள்ளது. இதன்காரணமாக தற்போது கடைகளில் தக்காளி கிலோ ரூ.14-க்கு விற்பனை செய்யப்பபடுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை தக்காளி கிலோ ரூ.25 முதல் 30 விற்பனை செய்யப்பட்டது. தற்போது ரூ.14-க்கு விற்பனை செய்யப்படுவதால் இல்லத்தரசிகள் மிகுந்த மகிழ்ச்சக்குள்ளாகியுள்ளனர்.
அதன் எதிரொலியாக காய்கறி கடைகளில் தக்காளியை பொதுமக்கள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர். பொதுமக்கள் அதிகளவில் வாங்கினாலும், வரத்து அதிகம் என்பதால் கடைகளில் தக்காளி தேக்கம் அடைந்து
இருப்பதையும் காணமுடிகிறது. அதேபோல் சின்ன வெங்காயம் கிலோ 20க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தக்காளியில் வைட்ட மின் ஏ அதிகளவில் உள்ளதால் கண்பார்வையை மேம்படுத்தும் சக்தி கொண்டது. தக்காளியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள லாம். மேலும், எண்ணற்ற சத்துக்கள் வைட்டமின் கள் தக்காளியில் அடங்கி உள்ளன.
குறிப்பாக வைட்டமின் சி உள்ளதால் தக்காளி சாப்பிடுவது இதயத்துக்கு நல்லது. இதன்காரண மாக இல்லத்தரசிகள் தக்காளியை கட்டாயம் உணவில் சேர்த்துக்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் காய்கறிகடைகளில் தக்காளி விற்பனை அதிகளவில் நடக்கும்.