தக்காளி விலை கடந்த வார இறுதியில் ஒரு கிலோ ரூ.90 முதல் ரூ.120 வரை சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனை ஆனது. அதற்கு முந்தைய நாட்களில் ஒரு கிலோ ரூ.140 வரை சென்றது. ஆனால் இன்று தக்காளி விலை சற்று குறைந்துள்ளது. நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.125க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் ரூ. 25 விலை குறைந்து ஒரு கிலோ தக்காளி ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி வரத்து கணிசமாக அதிகரித்ததால் விலை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.