கோவை, தொண்டாமுத்தூர் அடுத்த அட்டுக்கல் கிராமம் உள்ளது. இதன் வழியே ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. தற்போது இந்த பகுதியில் தக்காளி கத்திரிக்காய் உள்ளிட்ட காய்கறிகள் இப்பகுதி விவசாயிகள் விளைவித்து வருகின்றனர். இன்று அதிகாலை மலைப்பகுதியில் இருந்து வெளியேறிய குட்டியுடன் நான்கு காட்டிய யானைகள் விலை நிலங்களுக்கு புகுந்தது. நாகராஜன் என்பவரது தோட்டத்தில் காட்டு யானை கூட்டம் புகுந்தது. ஒரு ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த தக்காளி பயிர் செய்து உள்ளார். காய்கள் நன்கு முதிர்ந்து பழுத்த நிலையில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தன. யானை கூட்டம் ஆனது சுமார் அரை ஏக்கர் முழுவதும் தக்காளி பழங்களை தின்றும் காலால் மிதித்தும் செடிகளை பிடுங்கி எறிந்து நாசப்படுத்தியது. பின்னர் அருகில் இருந்த குட்டைக்கு சென்று தண்ணீர் பருகின. குட்டையின் ஒரு பகுதியை சேதப்படுத்தில் தண்ணீர் இது குறித்து வனத்துறை இருக்கு காட்டில் காவலுக்கு இருந்த தொழிலாளிகள் தகவல் தெரிவித்தனர். ஆனால் வனத்துறை யாரும் வந்து யானையை விரட்டவில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அதிகாலை எட்டு மணி அளவில் மீண்டும் அட்டுக்கல் ஒட்டிய வனப்பகுதிக்கு யானைகள் சென்று முகாமிட்டு உள்ளன. சேதமடைந்த தக்காளி செடிகளை பார்த்து விவசாயி நாகராஜன் கண்ணீர் விட்டு அழுத்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.