கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியில் தமுமுக மற்றும் மனிதநேய தொழிலாளர் சங்கம் 30ம் ஆண்டு தொடக்க விழா, தமுமுக,மமக மாவட்ட தலைவர் ஷாகுல் ஹமீது தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக மனிதநேய மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளரும் ,ஹஜ் கமிட்டி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் சமது கலந்துகொண்டு கட்சி கொடி ஏற்றி வைத்தார்.
இதில் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது கலந்து கொண்டார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் அளவுக்கு அதிகமான சுங்கச்சாவடிகள் உள்ளன, சுங்கச்சாவடி என்ற பெயரில் வழிப்பறி நடைபெற்றுக் கொண்டுள்ளது. காலாவதியான சுங்கச்சாவடிகளை அப்புறப்படுத்தவும், சுங்கச்சாவடியில் வசூல் செய்யப்படும் கட்டணத் தொகையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி,
செங்கல்பட்டு, விக்கிரவாண்டி, திருச்சி, நெல்லை நான்கு நேரி, கோவை, வேலூரில் உள்ள சுங்கச்சாவடிகளில் வருகிற 16-ம் தேதி முற்றுகை போராட்டமும், வருகின்ற 27-ம் தேதி சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமும் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக நடைபெறும் என்றும்,
வக்பு வாரிய திருத்த சட்டம் என்ற பெயரில் முன்னோர்கள் வழிபாட்டு தலங்களுக்காக இஸ்லாமியர்கள் நல்ல காரியங்களுக்காக கொடுத்த லட்சக்கான ஏக்கர் வக்பு நிலங்களை அபகரிக்கும் ஒரு சதி திட்டமாகவே உள்ளது. நிச்சயமாக அதனால் எந்த பலனும் ஏற்படப் போவதில்லை. அந்த சொத்துக்களை அபகரிப்பதற்காக இந்த ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள திட்டத்தை எதிர்த்து இந்தியா கூட்டணி முழுவீச்சில் களமிறங்கி இருக்கிறது.‘
இவ்வாறு அவர் கூறினார்.