Skip to content
Home » இன்றைய ராசிபலன்… (31.12.2024)

இன்றைய ராசிபலன்… (31.12.2024)

செவ்வாய்கிழமை… ( 31.12.2024)

மேஷம்… 

இன்றைய நாள் சற்று மந்தமாக காணப்படும். ஆன்மீக ஈடுபாடு மன நிம்மதி மற்றும் ஆறுதலை அளிக்கும். வேலை தொடர்பான பயணம் காணப்படுகின்றது. அதன் மூலம் சுமாரான பலன்களே கிடைக்கும். கடின உழைப்பின் மூலம் மட்டுமே வெற்றி கிட்டும். மகிழ்ச்சியாக இருக்க அகந்தை உணர்வை தவிர்க்கவும். உங்கள் துணையுடன் மனம் திறந்து பழகவும்.

ரிஷபம்…

நீங்கள் தைரியமாக சரியான பாதையில் செயல்பட வேண்டியது அவசியம். உங்கள் பயத்தை ஒதுக்கித் தள்ளி நம்பிக்கையுடன் செயல்படுங்கள். உங்கள் பணிகளை திறம்பட ஆற்ற உங்களுக்கு பொறுமை அவசியம். நீங்கள் யோசித்து சிறப்பாக செயல்பட வேண்டும். உங்கள் துணையுடன் பேசும்போது இணக்கம் குறைந்து காணப்படும். முதல் முறை பேசிக்கொள்வது போல பேசுவீர்கள்.

மிதுனம்..

நீங்கள் சுய முன்னேற்றப்பாதையில் செல்வீர்கள். நீங்கள் இன்று சில லட்சியங்களை அடைய வேண்டும் என்று உங்களை தயார் படுத்திக் கொண்டு இந்த நாளை சுமூகமாக்குவீர்கள். பணியிடச் சூழல் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் பணியில் வெற்றி பெற உங்கள் மனதை செலுத்துவீர்கள். நீங்கள் உங்கள் துணையுடன் நட்பாகவும் அன்பாகவும் நடந்து கொள்வீர்கள். பயணத்தின் போது இருவரும் உற்சாகமான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள்.

கடகம்… 

இன்று பண வரவு காணப்படலாம். இன்று உங்கள் செயல்களை முடிப்பதற்கு திட்டமிடுவீர்கள். நீண்ட கால திட்டங்களுக்கு இந்த நாள் உகந்த நாள்.  உங்கள் பணியில் புதிய வாய்ப்புகள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. கடின உழைப்பு மற்றும் சிறந்த முயற்சி மூலம் நீங்கள் சிறந்த நிலைக்கு வருவீர்கள். இதன் மூலம் உங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும். நீங்கள் உங்கள் துணையுடன் வெளிப்படையாக பழகுவீர்கள். இதனால் இருவருக்கிடையே நல்லிணக்கம் வலுப்படும்.

சிம்மம் …. 

கையிலுள்ள பணிகளை முடிப்பதற்கு நீங்கள் மிகுந்த முயற்சி எடுக்க வேண்டும்.பொதுவில் இன்றைய நாள் மிகவும் கடினமாக இருக்கும்.  கவனக் குறைவு காரணமாக பணியில் தவறுகள் நேரலாம். பணிகளை திறமையாக ஆற்ற ஆன்மீக ஈடுபாடு சிறந்தது. உங்கள் துணையிடம் உணர்சிவசப்படுவீர்கள்.இதனால் இருவருக்குமிடையே தன்னம்பிக்கை நிலை குறையும்.

கன்னி…. 

இன்றைய நாள் முன்னேற்றத்திற்கு உகந்த நாள் அல்ல. உங்கள் அணுகுமுறையில் யதார்த்தம் தேவை.  உங்கள் பணிகளை மேற்கொள்ள பொறுமை அவசியம். பணிச்சுமையும் அதிகமாக காணப்படும்.  நீங்கள் உணர்ச்சி வசப்பட்டு உங்கள் துணையுடன் சண்டையிடுவீர்கள். உறவில் நல்லிணக்கத்தை பராமரிக்க இத்தகைய போக்கை தவிர்க்க வேண்டும்.

துலாம்…

இன்று இனிமையான தருணங்கள் காத்திருக்கின்றன. பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் பங்கு பெறுவதன் மூலம் நீங்கள் பதட்டத்திலிருந்து விடுபடலாம்.  உங்கள் பணியைப் பொறுத்த வரை சுய வளர்ச்சிக்கு உற்சாகமான நேரம். புதிய முயற்சிகளும் சாத்தியம். உங்கள் துணையுடன் நண்பர் வீட்டு திருமணத்திற்கு செல்வீர்கள். இருவரும் உற்சாகமாக நேரத்தை கழிப்பீர்கள்.

விருச்சிகம்… 

இன்றைய நாள் மிகவும் அற்புதமான நாள். இன்று உங்களிடம் அதிக ஆற்றலும் உறுதியும் காணப்படும்.  பணியில் உங்கள் முயற்சிக்கு வெற்றி கிட்டும். நீங்கள் தன்னம்பிக்கையுடன் பணிகளை மேற்கொள்வீர்கள்.  உங்கள் துணையுடன் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்சிகள் நடைபெறக் காண்பீர்கள்.

தனுசு…

புத்திசாலித்தனம் மற்றும் சமநிலை அணுகுமுறை வெற்றிக்கு வழிகாட்டும். இன்றைய நாளை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். பணியில் மிதமான முன்னேற்றம் காணப்படும். நேரப்படி பணிகளை செய்வதன் மூலம் திறமையாக பணியாற்ற முடியும். நீங்கள் உணர்ச்சி வசப்படுவீர்கள். அதனை உங்கள் துணையிடம் வெளிபடுத்துவீர்கள். இதனால் உறவின் நல்லிணக்கம் பாதிக்கும்.

மகரம்… 

நீங்கள் உற்சாகமாகவும் ஆற்றலுடனும் இருப்பது நல்லது.பலன்களை எதிர்பாராது செயால்பட்டால் வெற்றி கிடைக்கும்.  பணியிடச் சூழல் உங்களுக்கு உகந்ததாக இருக்காது. அதிகப் பணிகள் மற்றும் அசௌகரியங்கள் உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும்.  நீங்கள் எந்த விஷயத்தையும் தீவிரமாக எடுத்துக் கொள்வீர்கள். சிறிய விஷயத்திற்கு வருத்தப் படுவது உறவை பாதிக்கும்.

கும்பம்….

உங்கள் விருப்பங்கள் இன்று நிறைவேறும். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள்.  சக பணியாளர்கள் உதவிகரமாகவும் ஆதரவாகவும் இருப்பார்கள். பணியைப் பொறுத்தவரை நீங்கள் திறம்பட பணியாற்றி உங்கள் செயல்திறனை நிரூபிப்பீர்கள். உங்கள் துணையுடன் வெளியிடங்களுக்கு செல்வீர்கள். இதனால் உங்கள் துணையை நன்கு புரிந்து கொள்வீர்கள்.

மீனம்….

பொதுவில் இன்றைய நாள் சிறப்பாக இருக்கும். உங்களுக்கு பயன் தரும் முடிவுகளை நீங்கள் இன்று எடுக்கலாம். நீங்கள் உங்கள் இலக்குகளை அமைத்து அதனை அடைவீர்கள். புதிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைப்பதற்கான சாத்தியம் உள்ளது. உங்கள் துணையுடன் அன்பாக மகிழ்ச்சியாக நடந்து கொள்வீர்கள்.இதனால் இருவரிடையே நல்லுறவு வளரும்.