Skip to content
Home » இன்றைய ராசிபலன்… (21.12.2024)

இன்றைய ராசிபலன்… (21.12.2024)

  • by Authour

சனிக்கிழமை.. (21.12.2024)

மேஷம்…

இன்று பலன்கள் கலந்து காணப்படும். எந்தச் செயலையும் செய்வதற்கு முன் சிறப்பாக திட்டமிடவும். உங்கள் தகவல் பரிமாற்ற திறமையை மேம்படுத்தி பலன் காணலாம்.  இன்று பணியிடச் சூழல் சவால் நிரம்பியதாக இருக்கும். இன்றைய நாள் சுமுகமாக இருக்க பணிகளை திட்டமிட்டு முன்னுரிமைப் படி ஆற்ற வேண்டும்.

ரிஷபம் ….

இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இருக்காது. எப்பொழுதும் உறுதியான மனநிலையுடன் இருங்கள். நீங்கள் ஓய்வாகவும் நாள் முழுவதும் மகிழ்ச்சியாகவும் இருங்கள். இன்றைய நாளை சாதுர்யமாக நிர்வகியுங்கள். அதிக வேலை காரணமாக பணியில் தவறுகள் நேரலாம். உங்களுக்கு சாதகமாக அமைய இன்று கவனமாக பணியாற்றவும்.

மிதுனம் …

இன்றைய நாள் சிறப்பாக இருக்கும். புதியமனிதர்களை இன்று சந்தித்து அவர்களோடு நட்பு கொள்ள இன்றைய தினத்தை பயன்ப்டுத்திக்கொள்ளுங்கள்.  உங்கள் கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் நல்ல பலனைத் தரும். பணியில் நேர்மறை எண்ணத்தோடு செயல்பட்டு சாதனை புரிவீர்கள்.

கடகம்…. 

எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக்கொள்ள வேண்டும். உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக் கொள்ள வேண்டும். அமைதியாக இருக்க முயலுங்கள். நீங்கள் எந்த விஷயத்தையும் சிறப்பாக கையாளுங்கள். பணியிடத்தில் இன்றைய நாளை சுமுகமாக்க நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். சிறிது முயற்சி எடுக்க வேண்டியிருக்கும். தளர்ந்து விடாதீர்கள்.

சிம்மம்…

இன்று அவ்வளவு சிறப்பான நாளாக அமையாது. உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்க வேண்டும். பிரார்த்தனை மேற்கொள்ளுங்கள். யோகா / தியானம் மேற்கொள்வது உதவிகரமாக இருக்கும். உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளின் இயல்பு காரணமாக இன்று நீங்கள் பணியில் மும்மரமாக இருப்பீர்கள். உங்களின் சுய உந்துதல் காரணமாக பணியை சிறப்பாக ஆற்ற முடியும்.

கன்னி…

எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருங்கள். ஒரு நேரத்தில் ஒரு விஷயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். வருவதை ஏற்றுக்கொள்ளுங்கள். பொறுமையாக இருங்கள். கடவுளிடம் உங்கள் குறைகளை முறையிடுங்கள். நற்பலன்கள் பெறலாம். உங்கள் சக பணியாளர்களிடம் பொறுமையாக இருக்க வேண்டும். ஒரேயடியாக வேலையில் மூழ்கி விடாதீர்கள். இன்றைய நாளை திட்டமிட்டால் சிறப்பான பலன்களைப் பெறலாம்.

துலாம்…

இன்றைய தினம் செழிப்பான நாளாக இருக்கும். மகிழ்ச்சியான மனநிலை காணப்படும். முக்கியமான முடிவுகள் எடுக்க விரும்பினால் இன்று உகந்த நாள். பூவைப் போல புத்துணர்ச்சியோடு சிறப்பாக இருப்பீர்கள்.  குறித்த நேரத்திற்கு முன்பே பணிகளை முடிப்பீர்கள். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும் அதிர்ஷ்டம் உண்டு. பணியாற்றும் முறையிலேயே உங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்துவீர்கள்.

விருச்சிகம்… 

இன்று மிகவும் சிறப்பான நாள். உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். உங்கள் தன்னம்பிக்கை வெற்றியை அளிக்கும்.  இன்று பணிகள் மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருக்கும். கடினமான பணிகளைக் கூட எளிதாகச் செய்வீர்கள். நீங்கள் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள்.

தனுசு….

நீங்கள் எந்த விஷயத்தையும் சகஜமாக அணுக வேண்டும். பதட்டப் படுவதை தவிர்க்க வேண்டும். முடிந்த அளவு அமைதியாக இருக்க வேண்டும். எப்பொழுதும் பிரார்த்தனை செய்து கொண்டே இருங்கள்.மனது ஒருமித்து நேரா நேரத்தில் பணிகளை ஆற்றினால் சிறப்பாக இருக்கும். தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் இருக்க பணிகளை ஒரு முறை சரிபார்க்க வேண்டும்.

மகரம்….

பணியில் கவனமாக இருக்கவும். பனியின் போது இடையூறுகள் ஏற்படாமல் பார்த்துக் கொண்டால் தவறுகளை தவிர்க்கலாம். பணிகள் அதிகமாக காணப்படும். திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். உங்கள் துணையுடன் நட்பு முறையில் விஷயங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். வாக்குவாதம் செய்யாமல் இன்றைய நாளைசிறப்பாக ஆக்குங்கள்.

கும்பம்….  இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாள். அவை உங்களுக்கு சாதமாக இருக்கும். இன்று தைரியமாகவும் உறுதியாகவும் இருப்பது உங்களுக்கு சாதகமாக இருக்கும்.  பணியிடத்தில் சக பணியாளர்களிடம் நட்புடன் இருக்க வேண்டும். திறமையாகப் பணியாற்றி அனைவரிடத்திலும் நற்பெயரைப் பெறுவீர்கள்.

மீனம்….

 உங்கள் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். உங்கள் திறமையை நீங்கள் உணரும் நாள். நீங்கள் தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். இதனால் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும்.  கடினமான பணிகளையும் இன்று எளிதாக முடிப்பீர்கள. நீங்கள் பணியாற்றும் முறையை கண்டு உங்கள் மேலதிகாரிகள் உங்களைப் பாராட்டுவார்கள்.