ஞாயிற்றுக்கிழமை… (05.01.2025)
மேஷம்… இன்று அதிர்ஷ்டம் காணப்படும் நாள். திருப்திகரமான பலன்கள் கிடைக்கும் சாதகமான நாள். உங்கள் பெற்றோரின் ஆதரவு கிடைக்கும்.அது உங்களுக்கு மகிழ்ச்சிகரமாக இருக்கும். பணியில் உங்கள் நேர்மை மேலதிகாரிகளின் பாராட்டைப் பெரும். சரியான நேரத்தில் பணிகளை முடிப்பது சக பணியாளர்களின் கவனத்தை ஈர்க்கும். உங்கள் பணியில் உங்கள் திறமை வெளிப்படும்.
ரிஷபம் ….
இன்று எதிர்பாராத வரவுகளும் வெற்றியும் கிடைக்கும் நாள். புத்திசாலித்தனத்தை பயன் படுத்துவதன் மூலம் அதிகம் சாதிக்கலாம். பணியில் உங்கள் செயல்திறன் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெரும். குறித்த நேரத்திற்கு முன்பே பணிகளை முடிப்பதற்கான சாத்தியம் உள்ளது.
மிதுனம்…
இன்று கவனமாகக் கையாள வேண்டிய கடினமான சூழ்நிலைகள் காணப்படும். இசை கேட்பது மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதன் மூலம் மன ஆறுதல் பெறலாம். உங்கள் பணிகளை மேற்கொள்ளும்போது சில போராட்டங்களை சந்திப்பீர்கள். உங்கள் சக பணியாளர்கள் மூலம் சில பிரச்சினைகளை நீங்கள் சந்திப்பீர்கள். இதனால் அவர்களுடன் நல்லுறவு காணப்படாது.
கடகம் …
இன்று திருப்திகரமான பலன்கள் கிடைக்காது. உங்கள் இலக்குகளை திட்டமிட்டு திறமையாக நடத்த வேண்டும். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள் அல்ல. பணிகள் கடோயாக யாருக்கும். குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க இயலாத நிலை இருக்கும். பணிகளை திட்டமிட்டு மேற்கொள்ளவும்.
சிம்மம் ..
இன்று உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் சாதகமான நாள். கடின உழைப்பு மற்றும் இடைவிடாத முயற்சி மூலம் லாபகரமான பலன்கள் கிடைக்கும். இது உங்கள் வளர்ச்சியை மேம்படுத்தும். நீங்கள் இன்று கடினமான பணிகளையும் எளிதாக மேற்கொள்வீர்கள். உங்கள் செயல்திறன் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறும்.இன்று உங்கள் துணையுடன் வெளியிடங்களுக்கு சென்று மகிழ்வீர்கள். இதனால் உறவில் நல்ல புரிந்துணர்வு ஏற்படும். இருவரிடமும் மகிழ்ச்சி காணப்படும்.
கன்னி..
இன்று முன்னேற்றகரமான பலன்கள் கிடைக்கும். புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி உங்கள் முயற்சிகளில் வெற்றி காணலாம். மொத்தத்தில் இன்று மகிழ்ச்சியான் நாள். பணி தொடர்பான பயணம் காணப்படுகின்றது. குறித்தநேரத்தில் பணிகளை முடிப்பதன் மூலம் உங்கள் திறமை வெளிப்படும். உங்களின் இனிமையான வார்த்தைகள் உங்கள் துணையை மகிழ்விக்கும். பயணம் காணப்படுகின்றது. இதனால் இருவரிடையே நல்ல புரிந்துணர்வு ஏற்படும்.
துலாம்….
இன்று உங்கள் செயல்களில் கவனமாக இருக்க வேண்டும். சாதகமான பலன்கள் கிடைக்க கடினமான சூழ்நிலைகளை கவனமாக கையாள வேண்டும். இசை கேட்டல் மற்றும் தியானம் மேற்கொள்வதன் மூலம் ஆறுதல் கிடைக்கும். பணியில் தவறுகள் நேர வாய்ப்புள்ளதால் உங்கள் பணிகளை கவனமாக மேற்கொள்ள வேண்டும். உங்கள் பணிகளை மீண்டும் சரிபார்த்து செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.
விருச்சிகம் …
இன்று சாதகமான பலன்கள் கிடைக்காது. நீங்கள் எளிதில் உணர்ச்சிவசப்படுவீர்கள். முடிவுகளை விரைந்து எடுப்பீர்கள். இதனால் பிரச்சினை ஏற்படுத்தும் சூழ்நிலை காணப்படும். உங்கள உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதன் மூலம் சிறந்த பலனைக் காணலாம். நீங்கள் பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க இயலாது. இது உங்களுக்கு சற்று கவலை ஏற்படுத்தும். சக பணியாளர்களிடமிருந்து சில தொல்லைகளை எதிர் கொள்ள நேரும்.
தனுசு…
உங்கள் வளர்ச்சிக்கு உதவும் முயற்சிகளை எடுக்க இன்றைய நாள் சாதகமாக உள்ளது. உங்கள் இலக்குகள் நிறைவேறும். திருப்தியும் நல்ல உணர்வும் உங்களிடம் இன்று காணப்படும். புதிய வேலை வாய்ப்புகள் உங்களுக்கு திருப்தி அளிக்கும். சாதித்தது போன்ற உணர்வு உங்களிடம் காணப்படும். எனவே நீங்கள் சிறப்பாக உணர்வீர்கள்.
மகரம்….
இன்று குழப்பங்களும் வருத்தமான மன நிலையும் காணப்படும். இன்றைய நாளை சமாளிக்க நீங்கள் அமைதியுடனும் கட்டுப்பாட்டுடனும் இருக்க வேண்டும். பணியிடத்தில் பணிகள் இறுக்கமாக காணப்படுவதால் நீங்கள் மும்மரமாக பணியில் ஈடுபட்டிருப்பீர்கள். சக பணியாளர்களின் எதிர்ப்பை சந்திப்பீர்கள். இது உங்களுக்கு கவலை அளிக்கும். சிறப்பாக பணியாற்ற பணிகளை திட்டமிட்டு செயலாற்ற வேண்டும்.
கும்பம்…
இன்று சீரான பலன்கள் கிடைக்காது. சவால்களை சந்திக்க வேண்டிய சூழ் நிலை காணப்படும். நீங்கள் பொறுமையுடனும் திறமையுடனும் இதனைக் கையாள வேண்டும். தான தருமங்கள் போன்ற தொண்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் மன அமைதி பெறலாம். சக பணியாளர்களுடன் சில அசௌகரியங்களை உணர்வீர்கள். இம்மாதிரியான அற்ப விஷயங்களை தவிர்த்து உங்கள் பணியில் கவனம் செலுத்த வேண்டியது இன்று அவசியம்.
மீனம்….
இன்று முன்னேற்றகரமான பலன்கள் கிடைக்காது. பொறுமையுடன் இருந்தால் பல நன்மைகளைக் காணலாம். வெறுமை இருப்பது போன்ற உணர்வு காணப்படும். தியானம் மேற்கொள்வதன் மூலம் இந்த சூழ்நிலையை சமாளித்து அமைதி பெறலாம். உங்கள் பணிகளை மேற்கொள்வதில் தடைகள் காணப்படும். இன்று நீங்கள் திட்டமிட்டு பணியாற்றுவது மிகவும் அவசியம் .