Skip to content

விஜய் பிறந்தநாள்….. கரூரில் பல்வேறு இடங்களில் சிறப்பு பூஜைகள்…

  • by Authour

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தனது 49வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். அவரது ரசிகர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்குதல், ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் என உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் கரூர் மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கம் மற்றும் ஒன்றிய, நகர, கிளை இயக்கங்கள் சார்பாக நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக கரூர் மாநகராட்சி உட்பட்ட பல்வேறு இடங்களில் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட தலைவர் மதியழகன் தலைமையில் ஆலயங்களில் சிறப்பு பூஜைகள், ஆதரவற்றோர் இல்லங்களில் உணவு வழங்குதல், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை வழங்குதல், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்புக் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்குதல் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

இதன் ஒரு பகுதியாக கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு பகுதியில் அமைந்துள்ள விநாயகர் மற்றும் ஐயப்பன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் நடிகர் விஜய் பெயரில் அர்ச்சனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும், வெங்கமேடு பகுதியில் அமைந்துள்ள அன்பு கரங்கள் இல்லத்தில் காலை உணவு வழங்கப்பட்டது. மேலும், வெங்கமேடு பகுதியில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடைகள் வழங்கி நடிகர் விஜய் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.

 

மேலும் இன்று 10 மணி அளவில் தனியார் திரையரங்கம் சார்பில் தளபதி விஜய் பிறந்தநாளை ஒட்டி ஒரு நாள் மட்டும் நான்கு காட்சிகளாக மாஸ்டர் திரைப்படம் சிறப்பு காட்சிகள் வெளியிடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!