இன்றைய ராசிபலன்… 17.04..2024
மேஷம்…
மேஷ ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் சுமாரான நாளாக இருக்கிறது. நாளை நீங்கள் எதையும் லேசாக எடுத்து கொள்ள வேண்டும். பணியிடத்தில் அதிக பணிகள் இருப்பதால் தவறுகள் நேர வாய்ப்புள்ளது. எனவே, கவனமாக திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். துணையிடம் உணர்ச்சிப்பூர்வமாக நடந்து கொள்வீர்கள். குடும்பத்தில் செலவுகள் அதிகமாக இருக்கும். மேலும், தேவையற்ற செலவுகளும் காணப்படும். ஆரோக்யத்தில் தோள் மற்றும் கைகளில் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
ரிஷபம்..
ரிஷப ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் சாதகமான நாளாக இருக்கிறது. நாளை நீங்கள் முக்கிய முடிவுகளை எடுக்கலாம். பணியிடத்தில் சிறப்பாக பணியாற்றி மேலதிகாரியிடம் பாராட்டு பெறுவீர்கள். கணவன் மனைவி இருவரிடையே நல்ல புரிந்துணர்வு காணப்படும். நாளை பணவரவு அதிகமாக இருக்கும். இதனை பயனுள்ள விஷயங்களுக்கு செலவு செய்வீர்கள். மேலும், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மிதுனம்…
மிதுனம் ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் மகிழ்ச்சியான நாளாக இருக்காது. பணியிடத்தில் அதிக பணிகள் காணப்படும். இதனால் கவலை அடைவீர்கள். துணையுடன் அமைதியான அணுகுமுறை அவசியம். நாளை பணப்பற்றாக்குறை காணப்படும். தேவையற்ற செலவுகள் காணப்படும். தாய்க்கு மூட்டு வலி மற்றும் கால் வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
கடகம்..
கடக ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் சுமாரான நாளாக இருக்கிறது. நாளை அமைதியான அணுகுமுறை அவசியம். ஆன்மீக செயல்களில் ஈடுபடுவதன் மூலம், நற்பலன்களை பெறலாம். பணியிடத்தில் கூடுதல் பொறுப்புகள் காணப்படும். இதனால், விரும்பத்தகாத சூழ்நிலையை சந்திக்க நேரிடும். துணையுடன் நட்பாக நடந்து கொள்வது நல்லது. நாளை பணப்புழக்கம் இருக்காது. பண இழப்பை தடுக்க முறையாக திட்டமிட்டு செயல்படுதல் வேண்டும். ஆரோக்கியத்தில் செரிமான பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.
சிம்மம்..
சிம்ம ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் உகந்த நாளாக இருக்காது. நாளை நீங்கள் புத்திசாலித்தனத்துடன் செயல்பட வேண்டும். முக்கியமாக நீங்கள் நாளை உணர்ச்சி வசப்படுதல் கூடாது. பணியிடத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். துணையுடன் நட்பான முறையில் பழகுவது நல்லது. நிதிநிலைமை திருப்திகரமாக இருக்காது. நாளை பணப்பற்றாக்குறை ஏற்படும். ஆரோக்கியத்தில் கண்களில் கவனம் செலுத்த வேண்டும்.
கன்னி..
கன்னி ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் சாதகமாக இருக்கும். நாளை உங்களுக்கு நண்பர்கள் அதிகமாக கிடைப்பார்கள். பணியிடத்தில் நல்ல வளர்ச்சி இருக்கும். திறமையாக பணியாற்றி பாராட்டு பெறுவீர்கள். நாளை அதிக பணவரவு இருக்கும். இதனை உங்கள் நாளை முதலீடு செய்ய பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
துலாம்..
துலாம் ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் சிறப்பான நாளாக இருக்கிறது. பணியிடத்தில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை நிலவும். துணையுடன் வெளி இடங்களுக்கு சென்று மகிழ்வீர்கள். ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொள்வீர்கள். நாளை பணவரவிற்கு ஏற்ற நாள். மேலும், பணியில் உங்களுக்கு ஊக்கத்தொகை போன்ற சலுகை கிடைக்கும். மேலும், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
விருச்சிகம்..
விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் மகிழ்ச்சியான நாளாக இருக்காது. பணியிடத்தில் தவறுகள் நேர வாய்ப்புள்ளதால் கவனமாக பணியாற்ற வேண்டும். கணவன் மனைவி இருவரிடையே தவறான புரிந்துணர்வு காணப்படும். கவன குறைவு காரணமாக பண இழப்பு நேர வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் இருமல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
தனுசு… தனுசு ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் உகந்த நாளாக இருக்காது. நாளை சுமுகமான பலன்கள் கிடைக்காது. பணியிடத்தில் குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க முடியாமல் அவதிப்படுவீர்கள். எனவே, திட்டமிட்டு பணியாற்றுவதன் மூலம் இத்தகைய உணர்வை தவிர்க்கலாம். நாளை தேவையற்ற செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. தாயின் உடல் நலத்திற்காக செலவு செய்ய நேரும்.
மகரம்..
மகரம் ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் சாதகமான நாளாக இருக்கிறது. நாளை நீங்கள் எந்தவொரு செயலையும் விரைந்து முடிப்பீர்கள். பணியிடச் சூழல் உங்களுக்கு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். கணவன் மனைவி இருவரிடையே நல்ல புரிந்துணர்வு ஏற்படும். நாளை பணப்புழக்கம் அதிக அளவில் இருக்கும். மேலும், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கும்பம்..
கும்ப ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் சாதகமாக நாளாக இருக்கும். நாளை மங்களகரமான நிகழ்ச்சிகள் நடக்கும். பணியிடத்தில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புள்ளது. துணையுடன் நல்ல புரிந்துணர்வு காணப்படும். பணப்புழக்கம் நீங்கள் எதிர்பார்த்த அளவிற்கு இருக்கும். மேலும், எதிர்பாராத வகையில் பணவரவு வரும். மேலும், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மீனம்…
மீன ராசிக்காரர்களுக்கு நாளைய சுமாரான நாளாக இருக்கிறது. நாளை உங்கள் செயல்களில் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பணியில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டும். துணையுடன் மனம் திறந்து பேசுவதன் மூலம் ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொள்ள முடியும். நாளை கவனக்குறைவு காரணமாக பண இழப்பு ஏற்படலாம். ஆரோக்கியத்தில் செரிமானம் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படலாம்.