செவ்வாய்கிழமை… (10.12.2024)
மேஷம்…
இன்று கடினமான சூழ்நிலைகளை சந்திக்க நேரலாம். நீங்கள் இதில் முழு ஆற்றலையும் செலுத்த வேண்டியிருக்கும். பொழுதுபோக்கிற்கென சிறிது நேரமே ஒதுக்க வேண்டியிருக்கும். நீங்கள் இன்று அமைதியாக இருக்கவேண்டும்.
ரிஷபம்..
இன்று நீங்கள் சௌகரியமாக உணர்வீர்கள். இனிமையான வார்த்தைகள் மூலம் நீங்கள் பலனடைவீர்கள். இதனால் உங்கள் தன்னம்பிக்கை வளரும். பணிகளை குறித்தநேரத்தில் முடிக்க சாத்தியமாகலாம். நீங்கள் உங்கள் மன உறுதியால் பணிகளை குறித்தநேரத்தில் முடிப்பீர்கள்.
மிதுனம்…
இன்று உங்கள் மனதில் தெளிவு காணப்படும். இதனால் உங்கள் செயல்களை திறமையாக ஆற்றுவீர்கள். பொருத்தமான செயல்களை செய்து உங்கள் நிலையை மேம்படுத்துவீர்கள். இனிமையான வார்த்தைகள் உங்களுக்கு பல நல்ல பலன்களை அளிக்கும்.
கடகம்…
இன்று பதட்டமான சூழ்நிலை காணப்படும். எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்வதன் மூலம் அமைதியை உணர்வீர்கள். கூடுதல் பொறுப்புகள் உங்களுக்கு கவலை அளிக்கும். இரவில் தூக்கமின்மை காணப்படும்.
சிம்மம்..
ஏழைகள் மற்றும் உடல் ஊனமுற்றோருக்கு பண உதவி செய்ய இந்த நாளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் மகிழ்ச்சியாக இருப்பது போல உணர்வீர்கள். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது.இன்று அதிகப் பணிகள் காணப்படும். நீங்கள் பணிகளை திட்டமிட்டு மேற்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.
கன்னி…
உங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். உங்கள் மனதில் சமநிலை உணர்வு காணப்படும். முக்கிய முடிவுகள் இன்று நல்ல பலன் தரும். உங்கள் தன்னம்பிக்கை நிலை அதிகரிக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைகளை நிரூபிப்பீர்கள். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். பணியிடத்தில் உற்சாகமான நிகழ்சிகள் நடக்கும்.
துலாம்..
இன்று நீங்கள் சிறந்த ஆற்றலுடன் காணப்படுவீர்கள். இன்றைய நாளை நீங்கள் பயனுள்ள வகையில் பயன்படுத்திக் கொள்ளலாம். இன்று பல சௌகரியங்களை நீங்கள் உணரலாம்.நீங்கள் செய்யும் பணியில் வெற்றி காண்பீர்கள். உங்கள் தனித்திறமையை வெளிப்படுத்தி அதற்குரிய அங்கீகாரம் பெறுவீர்கள்.
விருச்சிகம்..
இன்று மிதமான பலன்களே கிடைக்கும். இன்று நற்பலன்கள்காண நீங்கள் யதார்த்தமான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும். சுய முயற்சி நல்ல பலன் தரும். உங்கள் பணியில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். பணிகளை கவமாகக் கையாள நீங்கள் பணி சார்ந்த முறையில் திட்டமிட வேண்டும்.
தனுசு..
இன்று முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்க வேண்டாம். உங்கள் செயல்களில் சிறிது கவனம் தேவை. இன்று நீங்கள் உணர்ச்சி வசப்படலாம். அதனை தவிர்ப்பது நல்லது.உங்கள் பணிகளை மேற்கொள்ளும்போது ஏமாற்றங்களையும் தடைகளையும் சந்திப்பீர்கள்.
மகரம்..
உங்கள் பணிகளை முடிக்க இன்றைய நாளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இன்று உங்களின் வளர்ச்சி உறுதி. நீங்கள் அமைதியான அணுகுமுறை மேற்கொள்வீர்கள். இதனால் நல்ல முடிவுகளை எடுக்க இயலும்.
நீங்கள் பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். உங்கள் மேலதிகாரிகளின் அங்கீகாரம் பெறுவீர்கள். தரமான பணிகளை வழங்குவீர்கள்.
கும்பம்..
இன்றைய நாள் சீராகச் செல்லும். மகிழ்ச்சியும் திருப்தியும் காணப்படும். இன்று நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். இதனை உங்கள் முன்னேற்றத்திற்கு நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பணியிடத்தில் உங்கள் திறமைகளை நிரூபிப்பீர்கள். உங்கள் பணிக்கு சிறந்த அங்கீகாரம் பெறுவீர்கள்.
மீனம்..
உங்கள் செயல்களை நீங்கள் சுமூகமாக மேற்கொள்ள அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். இன்று நீங்கள் நம்பிக்கை இழக்க நேரலாம். எனவே உங்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.பணிகள் அதிகமாக காணப்படும். இதனால் பணியில் தவறுகள் செய்ய நேரலாம்.