Skip to content
Home » இன்றைய ராசிபலன்… (29.12.2024)

இன்றைய ராசிபலன்… (29.12.2024)

ஞாயிற்றுக்கிழமை… (29.12.2024)

மேஷம் …

உங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும். அமைதியுடனும் பொறுமையுடனும் இருக்க வேண்டும். எதிர்காலத்திற்கு திட்டமிடுங்கள். பணியில் அதிகப்படியான சுமைகள் காணப்படும். உங்கள் பணிகளை முறையாக முடிக்க சில சௌகரியங்களை இழக்க நேரும். பணியிடத்தில் காணப்படும் பதட்டத்தை உங்கள் துணையிடம் வெளிபடுத்து வீர்கள்.இதனால் இருவரிடையே வாக்குவாதம் ஏற்படும். எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

ரிஷபம் …

உங்கள் முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். உங்களிடம் தன்னம்பிக்கை நிறைந்து காணப்படும். உங்கள் பணிகளை செவ்வனே ஆற்றுவீர்கள்.பணியிடத்தில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். உங்களுள் இருக்கும் திறமை காரணமாக நீங்கள் திறம்பட செயலாற்றுவீர்கள்.உங்கள் துணையுடன் நட்பான அணுகுமுறை மேற்கொள்வீர்கள். இதனால் உறவில் ஒற்றுமை வலுப்படும்.

மிதுனம்…

இன்று உங்களிடம் நம்பிக்கைப் போக்கு காணப்படும். உங்கள் முயற்சி மூலம் கிடைக்கும் வெற்றி உங்கள் மன உறுதியை அதிகரிக்கும். நீங்கள் பணிகளை எளிதாக முடிப்பீர்கள். புதிய வாய்ப்புகள் மூலம் உங்கள் திறமையை நீங்கள் உணர்வீர்கள். உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். நட்பான அணுகுமுறை மேற்கொள்வீர்கள்.

கடகம்… 

இன்று பாதுகாப்பின்மை உணர்வு உங்களிடம் காணப்படும். இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சி அடையுங்கள். இதனால் திருப்தி நிலவும். பணியிடத்தில் அமைதியற்ற சூழல் காணப்படும். சக பணியார்களுடனான உறவில் சில சிக்கல்கள் இருக்கும். குடும்பப் பிரச்சினை காரணமாக உங்கள் துணையுடன் கடுமையாக நடந்து கொள்வீர்கள். இதனை தவிர்ப்பது நல்லது.

சிம்மம்….

இன்று சில சிக்கல்கள் காணப்படும் என்பதால் எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்ள வேண்டும். வாக்குவாதம் மற்றும் வதந்திகளில் ஈடுபட வேண்டாம்.  பணியிடச் சூழல் சிறிது கடினமாக காணப்படும். கூடுதல் பொறுப்புகள் காணப்படும். உங்கள் துணையிடம் அகந்தைப் போக்கை காண்பிப்பீர்கள். உறவு நல்லுறவாக இருக்கவும் உறவில் மகிழ்ச்சி பராமரிக்கவும் இதனை தவிர்த்தல் நல்லது.

கன்னி….

இன்று இலக்குகளை அடைவதற்கு உகந்த நாள். இன்று எதிர்பாராத நன்மைகள் நேரலாம்.  நீங்கள் உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை விரைவாக முடிப்பீர்கள். பணியிடச் சூழல் சிறப்பாக இருக்கும். உங்கள் மனதில் பொங்கும் அன்பை உங்கள் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள். உங்கள் துணையிடம் இனிமையாகப் பேசுவீர்கள்.

துலாம் …

உங்களின் முக்கியமான செயல்களை இன்று முடிக்க இயலாது. உங்கள் செயல்களை முன்கூட்டியே திட்டமிட்டால் வெற்றி அடையலாம். நீங்கள் பணியில் ஆழ்ந்து ஈடுபட்டிருப்பீர்கள். பணிகளை மேற்கொள்ளும்போது சில சவால்களை சந்திக்க நேரும். சூழ்நிலைக் கேற்றவாறு வாழ வேண்டியது அவசியம்.  குடும்ப பிரச்சினை காரணமாக உங்கள் துணையுடன் சண்டை ஏற்படும். இதனால் உங்கள் துணை கவலை அடைய நேரும்.

விருச்சிகம்… 

இன்று பிரார்த்தனை மற்றும் தியானம் ஆறுதலை அளிக்கும். எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்ள வேண்டும். பொழுதுபோக்கு நடவடிக்கைகள் மூலம் மகிழ்ச்சி காணலாம்.  நீங்கள் இன்று பணிகளை திட்டமிட்டபடி முடிக்க வேண்டும். மூத்தோர்களின் ஆலோசனை வழி காட்டும். உங்கள் விருப்பமின்றி வீட்டில் நடைபெறவிருக்கும் சுபநிகழ்ச்சி பற்றிய அதிருப்தி காணப்படும். உங்கள துணையிடம் கோபமாக நடந்து கொள்வீர்கள்.

தனுசு…

இன்று நிச்சயமற்ற தன்மையை உணர்வீர்கள். உங்கள் முயற்சிகளுக்கான பலனில் நன்மை தீமை இரண்டும் கலந்து காணப்படும். அமைதியாக இருக்க வேண்டும்.  பணியில் கவனம் குறைந்து காணப்படும். எனவே கவனமாகப் பணியாற்ற வேண்டும். நீங்கள் இன்று சகஜமாகவும் உங்கள் துணையின் விருப்பப்படியும் நடந்து கொள்ள வேண்டியது அவசியம்.

மகரம்… 

இன்று அனைத்தும் சுமூகமாக நாடாகும். நம்பிக்கை உணர்வு உங்களை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும்.  நீங்கள் இன்று பணியில் சிறந்து விளங்குவீர்கள். உங்கள் திறமைகளை காண்பிப்பீர்கள். அதே சமயத்தில் உங்களுள் இருக்கும் ஆற்றலைக் கண்டறிய முடியும். இன்று உங்கள் போக்கில் துணையின் மீது அன்பும் அக்கறையும் காணப்படும். நண்பரின் இல்ல திருமண விழாவிற்கு செல்வதன் மூலம் இருவரும் நெருக்கமாக காணப்படுவீர்கள்.

கும்பம்….

உங்கள் மனதில் சில இலக்குகளை கொண்டிருப்பீர்கள். அவைகளை செயலாற்றுங்கள். அதனை எளிய வழியில் அடையலாம். பயணத்தின் மூலம் ஆதாயம் கிடைக்கும்.  பணியிடத்தில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். உங்கள் திறமைக்கு மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.பணிகளை உற்சாகமாக மேற்கொள்வீர்கள்.

மீனம்…  

ஆன்மீக ஈடுபாடு வெற்றியை அளிக்கும். உங்களிடம் உறுதியும் காணப்படும்.  வேலை தொடர்பான பயணம் காணப்படும். இறுக்கமான பணிகள் மற்றும் பணிச்சுமைகள் காரணமாக பணியில் தவறுகள் நேரலாம்.  நீங்கள் இன்று உணர்ச்சிவசப்பட்ட மன நிலையில் இருப்பீர்கள். சிறிய விஷயங்களைக் கூட தீவிரமாக எடுத்துக் கொள்வீர்கள். இது உறவின் நல்லிணக்கத்தை பாதிக்கும்.