சனிக்கிழமை….. (28..12.2024)
மேஷம்…
இன்று சற்று மந்தமான நாள். இன்று சிறிது குழப்பத்துடன் காணப்படுவீர்கள். நெருங்கிய நண்பர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. இசை கேட்பது மற்றும் பொழுது போக்கு நிகழ்ச்சிளில் கலந்து கொள்வது ஆறுதலை அளிக்கும்.பணிகளில் இன்று மனநிறைவு காணப்படாது. உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை குறித்தநேரத்தில் முடிக்க இயலாது. இது உங்களுக்கு கவலையை அளிக்கும்.
ரிஷபம் ….
இன்று வளர்ச்சி காணப்படும் நாள். சிறிதளவு முயற்சியில் அதிக வெற்றி காண்பீர்கள். இன்று நம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். கடினமான பணிகளைக் கூடஎளிதாக ஆற்றுவீர்கள். உங்கள் உறுதி மற்றும் பொறுப்பு காரணமாக பணிகள் சுமூகமாக நடக்கும். திட்டமிடுவதன் மூலம் இது சாத்தியம்.
மிதுனம்…
சுய முயற்சியில் நல்ல பலன்களைக் காண்பீர்கள். இன்று காணப்படும் மகிழ்ச்சியும் திருப்தியும் உங்கள் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். பணி வளர்ச்சி ஸ்திரமாக இருக்கும். உங்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்படும். நம்பிக்கையுடன் அதனை எற்றுக் கொள்ளுங்கள்.
கடகம்…
நல்ல சிந்தனை மூலம் சிறப்பான செயல்களுக்கு முயற்சி செய்வீர்கள். உணர்ச்சி வசப்படுதலை தவிர்க்க வேண்டும். இன்று பணிகள் அதிகமாக காணப்படும் சக பணியாளர்களுடன் சிறந்த முறையில் கலந்து பழகுவதன் மூலம் புரிந்துணர்வை வளர்த்துக் கொள்ள இயலும்.
சிம்மம்….
சில சமயங்களில் அமைதியின்மையை உணர்ந்தாலும் அறிவார்ந்த செயல்களை செய்யுங்கள். பொறுமையான அணுகுமுறை மேற்கொண்டால் சிறந்தது. உங்கள் பணிகளை மேற்கொள்ளும் போது கவனமாக இருக்க வேண்டும். உங்கள் மேலதிகாரிகளுடன் சில விரும்பத்தகாத தருணங்களை சந்திக்க நேரும்.
கன்னி…
உங்கள் முயற்சியில் வெற்றி கிடைக்கும். நீங்கள் உங்கள் நடவடிக்கைகளை எளிதாக மேற்கொள்வீர்கள். இன்று அதிர்ஷ்டம் காணப்படும். பணியிடத்தில் நல்ல பலன்கள் காணப்படும். மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் துணையுடன் வெளியிடங்களுக்கு செல்வதன் மூலம் மகிழ்ச்சியான தருணங்களை அனுபவித்து மகிழலாம்.
துலாம்…
பிரார்த்தனை மற்றும் இறை வழிபாடு மன ஆறுதலை அளிக்கும். விவேகமான அணுகுமுறை மேற்கொள்வது நல்லது. பணிநிமித்தமான பயணம் காணப்படுகின்றது. சிறந்த திட்டமிடல் மூலம் ஆக்கபூர்வமான பலன்கள் கிடைக்கும். உங்கள துணையிடம் வன்மையாக நடந்து கொள்வீர்கள். நல்லுறவை பராமரிக்க அத்தகைய வன்மை உணர்வை தவிர்ப்பது நல்லது.
விருச்சிகம்….
இன்று உறுதியுடன் இருக்க வேண்டிய நாள். நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையையும் கவனமாக ஆற்றினால் வெற்றி நிச்சயம். பணியிடத்தில் சில விரும்பத்தகாத தருணங்கள் காணப்படும். சக பணியாளர்களுடன் அனுசரித்து செல்வதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும். நீங்கள் இன்று அமைதியிழந்து உங்கள் துணையிடம் உணர்சிவசப்படுவீர்கள். எனவே இதனை தவிர்த்து அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்.
தனுசு…
ஆன்மீக ஈடுபாடு நல்ல முன்னேற்றத்தை அளிக்கும். இதுவே உங்களின் எதிர்கால போக்காக ஆகிவிடும். உங்கள் வளர்ச்சியில் தடைகளை ஏற்படுத்தும் சில தருணங்களைக் காண்பீர்கள். எனவே முன் ஜாக்கிரதையாக விழிப்புடன் அதனை எதிர்கொள்ள தயாராகுங்கள். உங்கள் துணையிடம் தேவையின்றி உணர்ச்சிவசப்படுவீர்கள். எனவே உங்களின் இந்தப் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம்.
மகரம்….
இன்றைய நாள் உற்சாகமான மகிழ்ச்சியான நாளாக இருக்கும்.எனவே மகிழ்ச்சியுடன் இன்றைய நாளை பயன்படுத்திக்கொள்ளுங்கள். மகரம் பணியில் முன்னேற்றங்கள் காணப்படும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தை அனுசரித்துப் போவதன் மூலம் இன்றைய நாளை சிறப்பானதாக ஆக்கலாம். மகிழ்ச்சியுடன் இருக்கலாம்.
கும்பம்…
நீங்கள் எந்த விஷயத்தையும் இன்று எளிதாக எடுத்துக் கொண்டு வெற்றி காண்பீர்கள். உங்கள் விருப்பங்கள் எளிதில் நிறைவேறும். பணியிடத்தில் முன்னணியில் இருப்பீர்கள். உங்கள் முயற்சிக்கு பாராட்டு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. உங்கள் துணையுடன் சகஜமான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் நீங்கள் மற்ற ஜோடிகளுக்கு உதாரணமாக திகழ்வீர்கள்.
மீனம்…
இன்று நம்பிக்கையுடனும் புத்துணர்ச்சியுடனும் உங்கள் செயல்களை ஆற்ற வேண்டும். சுலோகம் சொல்வது மற்றும் தியானம் மேற்கொள்வதன் மூலம் இது சாதித்யம். பணியிடத்தில் வளர்ச்சி சுமூகமாக இருக்காது. அதிகமான பணிகள் உங்களுக்கு கடினமாக இருக்கும். குடும்ப பிரச்சினை காரணமாக அமைதியின்மை காணப்படும். இதனை உங்கள் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள். எனவே ஒன்றாக அமர்ந்து பேசி பிரச்சினயை தீர்த்துக் கொள்வது சிறந்தது.