திங்கட்கிழமை…. (23.12.2024)
மேஷம்…
இன்று உற்சாகத்துடன் காணப்படுவீர்கள்.இன்றைய நாளை நல்ல பலன் பெற பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் கடின முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். நீங்கள் விரைந்து முடிவெடுப்பீர்கள். நீங்கள் செய்யும் பணியை விரும்பி செய்வீர்கள். சுய வளர்ச்சி மூலம் பணயில் முன்னேற்றம் காண்பீர்கள். இன்று அதிர்ஷ்டத்தை விட கடின உழைப்பை நம்ப வேண்டும்.
ரிஷபம்..
இன்று விருப்பமான பலன்கள் கிடைக்காது. தீய விளைவுகளை தவிர்க்க நீங்கள் எந்த விஷயத்தையும் தொடங்குமுன் யோசித்து செயல்பட வேண்டும்.பிறருடன் பேசும்போது கவனமாகப் பேச வேண்டும். உங்கள் பணிகளை திறமையாக ஆற்றுவதில் சில தடைகளும் ஏமாற்றங்களும் காணப்படும். உங்கள் சக பணியாளர்களுடனான தொடர்பும் சமூகமாக இருக்காது.
மிதுனம்….
உங்கள் முயற்சிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் இன்று தடைகள் நிறைந்து காணப்படும். விரும்பத்தகாத சூழ்நிலை இருந்த போதிலும் எதையும் எளிதாக எடுத்துக் கொண்டு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். நீங்கள் ஒருவிதமான வெறுமையை உணர்வீர்கள். இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். பணியிடச் சூழல் சுமூகமாக இருக்காது. பணிகளை ஆற்றும் போது சில தாமதங்கள் ஏற்படலாம்.
கடகம்…
இன்று ஆக்கபூர்வமான நாள். நபர்கள் மூலம் ஆதரவும் பலனும் பெறுவீர்கள். இன்று உற்சாகமாக காணப்படுவீர்கள். உங்கள் பணியில் முன்னேற்றகரமான பலன்கள் காணப்படும். உங்கள் சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். உங்கள் செயல்திறனில் திருப்தி அடைவீர்கள்.
சிம்மம்….
இன்று மிதமான பலன்களே காணப்படும்.இன்று பொறுமையாக இருக்க வேண்டும். தியானம் மேற்கொள்வதன் மூலம் எத்தைகைய சூழ்நிலையையும் எதிர்கொள்ள முடியும். இன்று பணிகள் அதிகமாக காணப்படும். எனவே திட்டமிட்டு அதன்படி பணிகளை ஆற்றினால் வெற்றி காண இயலும்.
கன்னி….
இன்று உங்கள் செயல்களில் வெற்றி காண புத்திசாலித் தனத்தை பயன்படுத்த வேண்டும். சூழ்நிலை கட்டுக்கடங்காமல் இருக்கும். எனவே சிந்தித்து செயல்பட வேண்டும். இன்று பணியிடத்தில் கவனமின்மை காரணமாக தவறுகள் நேர வாய்ப்புள்ளது. எனவே கவனமாக செயல்பட வேண்டும்.
துலாம்…
இன்றைய நாள் மந்தமாக காணப்படும். உங்கள் நம்பிக்கைக்கு உயிர் கொடுங்கள். உங்கள் முயற்சிகளில் வெற்றி பெற நம்பிக்கை முக்கியம். உங்கள் பணியில் ஏமாற்றமான சூழ்நிலைகள் காணப்படும். பணியிடச் சூழல் சுமூகமாக இருக்காது. இது உங்களுக்கு வருத்தத்தை அளிக்கும். நீங்கள் பொறுமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
விருச்சிகம்…
இன்று மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பது இன்று நன்மை தரும். உற்சாகமான அணுகுமறை மூலம் இன்றைய நாளை சிறப்பாக்கிக் கொள்ளலாம். சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். உங்கள் மேலதிகாரிகளிடமிருந்து எதிர்பாராத அனுகூலங்கள் கிடைக்கும். சாதித்த உணர்வு உங்களிடம் காணப்படும்.
தனுசு….இன்று சுமூகமான நாளாக இருக்கும். உறுதியான போக்கு உங்களை நல்ல முடிவு எடுக்க வைக்கும். உங்கள் இலக்குகளில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் பணியைப் பொறுத்தவரை இன்று மகிழ்ச்சியான நாள். உங்கள் மேலதிகாரிகளிடமிருந்து பாராட்டு பெறுவீர்கள். புதிய வாய்ப்புகள் பெருகி காணப்படும்.
மகரம்..
இன்று மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். இசையைக் கேப்டதன் மூலம் அமைதி பெறலாம். இது பிரச்சினைகளைக் கையாள உதவும். வாக்குவாதங்களிலிருந்து விலகி இருக்கவும். நட்பான அணுகுமுறை மேற்கொள்ளவும். உங்கள் பணியைக் கையாளும் போது கவனம் செலுத்த வேண்டும். இதனால் உங்கள் திறன் அதிகரிக்கும். தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
கும்பம்… இன்று நம்பிக்கை மற்றும் தன்னம்பிக்கை இழந்து காணப்படுவீர்கள். நல்ல பலன்களைக் காண நீங்கள் உறுதியுடன் இருக்க வேண்டும். உங்கள் வளர்ச்சியில் மிகுந்த தடைகளை எதிர்கொள்வீர்கள். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். பனியின் போது தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பணிகளை திட்டமிட்டு முறையாக ஆற்ற வேண்டியது முக்கியம்.
மீனம் ….
இன்று பல நன்மைகள் நடக்கும். உங்கள் அணுகுமுறையில் நம்பிக்கை காணப்படும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் நல்ல பலனைத் தரும். சமூகத்தில் புதிய நபர்களின் தொடர்பு கிடைக்கும். உங்கள் திறமைகளை தனித்த அணுகுமுறை மூலம் வெளிபடுத்டுவீர்கள். இதனால் பணியிடத்தில் உங்கள் செயல்திறன் சிறப்பாக இருக்கும்.