Skip to content
Home » இன்றைய ராசிபலன்… (20.12.2024)

இன்றைய ராசிபலன்… (20.12.2024)

வௌ்ளிக்கிழமை… (20.12.2024)

மேஷம்:

இன்று சவால்களை சந்திக்க அமைதியான போக்கை மேற்கொள்ள வேண்டும். உணர்ச்சி வசப்டுதலை தவிர்க்க வேண்டும். அமைதியுடனும் கட்டுப்பாடுடனும் இருக்க வேண்டும். நீங்கள் பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க மாட்டீர்கள். சக பணியாளர்கள் ஆதரவாக இருக்க மாட்டார்கள். அவர்களால் சில தொல்லைகள் ஏற்படும்.

ரிஷபம்..

இன்று மிதமான வளர்ச்சி காணப்படும். பொறுமையும் உறுதியும் இருந்தால் இலக்கில் வெற்றி அடையலாம். நேரமின்மை காரணமாக பணியில் தாமதங்கள் ஏற்படலாம். பணியில் நீங்கள் தவறுகள் செய்ய நேரலாம். பணிகளை கவனமாகச் செய்ய வேண்டும்.

மிதுனம்…

இன்று உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள். இன்று மன அமைதியுடன் காணப்படுவீர்கள். இன்று எடுக்கும் முடிவுகள் நற்பலன்களைத் தரும். பணிகள் சுமுகமாக நடக்கும். உங்கள் திறமை உங்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும்.பணியில் உங்கள் செயல்திறனுக்கான அங்கீகாரம் பெறுவீர்கள்.

கடகம்..

இன்று மனதில் பதட்டங்கள் அதிகமாக காணப்படும். எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக்கொள்ள வேண்டும். முக்கிய முடிவுகள் எடுப்பது அல்லது புதிய முயசிகள் தவிர்க்கப்பட வேண்டும். பிரார்த்தனை மற்றும் தியானம் ஆறுதல் தரும்.

சிம்மம்…

இன்று மகிழ்வாக இருப்பதற்கு சாதகமான நாளாக அமையாது. ஆன்மீகப் பயணங்கள் ஆறுதல் தரும். இன்றைய சவால்களை தன்னம்பிக்கையுடனும் உறுதியுடனும் எதிர்கொள்ள வேண்டும். இன்று பணிகள் அதிகமாக காணப்படும். பணியில் கூடுதல் பொறுப்புகள் ஏற்க நேரும்.

கன்னி…

இன்று சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க நேரும். கடினமான சூழ்நிலைகளை சமாளிக்க மிகுந்த பொறுமை அவசியம். நம்பிக்கையுடன் செயல்பட்டால் பலன்கள் உங்களுக்கு சாதகமாக அமையும்.  இன்று அதிக பணிச்சுமைகள் காணப்படும். நீங்கள் திறமையுடன் பணியாற்ற உங்கள் பணிகளை திட்டமிட வேண்டும்.

துலாம்…. 

இன்று முன்னேற்றகரமான பலன்கள் காணப்படும். முன்னேற்றம் பெறுவதற்கான வலிமையையும் உற்சாகமும் உங்களிடம் காணப்படும். இன்று அனைத்து விதத்திலும் செழிப்பாக இருக்கும். புதிய வாய்ப்புகளால் உற்சாகமும் திருப்தியும் காணப்படும். உங்கள் பணிகளை மகிழ்வுடன் செய்வீர்கள்.

விருச்சிகம்..

இன்று முனேற்றகரமான பலன்கள் கிடைக்கும். பயணங்கள் காணப்படும். ஆன்மீக ஈடுபாடு மூலம் மனத்தெளிவு கிடைக்கும். இதனால் கடினமான சூழ்நிலையையும் நீங்கள் எளிதாக கையாள்வீர்கள்.

தனுசு… 

இன்று சிறிது மந்தமாக காணப்படும். பாதுகாப்பின்மை உணர்வு உங்களிடம் காணப்படும். எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொண்டால் அதில் நற்பலங்களைக் காண முடியும். பணியில் கூடுதல் பொறுப்புகளை சுமக்க நேரும். கவனமாகப் பணியாற்றுவதன் மூலம் உங்கள் திறமை மேம்படும்.

மகரம்…

இன்று தன்னம்பிக்கை குறைவாகவும், நம்பிக்கையின்மையும் காணப்படும். உங்கள் லட்சியங்களை அடைவதில் தடை காணப்படும். இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். பணிகளில் தவறு நேர வாய்ப்பு உள்ளது. உங்கள் பணிகளை திட்டமிட்டு திறமையுடன் ஆற்ற வேண்டும்.

கும்பம்… 

இன்று வளர்ச்சி காணப்படும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். இன்று எடுக்கும் முக்கிய முடிவுகள் நல்ல பலனைத் தரும். பணியிடத்தில் திருப்தி நிலவும். பணியிடச் சூழல் சிறப்பாக இருக்கும். மகிழ்ச்சியுடன் பணியாற்றுவீர்கள்.

மீனம்…

இன்று பல உற்சாகமான தருணங்களை நீங்கள் சந்திக்கலாம்.புதியகட்ட வளர்ச்சி காண்பீர்கள். திட்டமிட்டு பணியாற்றுவதன் மூலம் உங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். நற்பெயரும் அங்கீகாரமும் கிடைக்கப் பெறுவீர்கள். பணியிடச் சூழல் சிறப்பாக இருக்கும்.