செவ்வாய்கிழமை…. (07.01.2025)
மேஷம்…
இன்று உங்கள் பொறுமையை சோதிக்கும் கடினமான சூழ்நிலை காணப்படும். அதனால் நீங்கள் சில சௌகரியங்களை இழக்க நேரும். நீங்கள் சாதகமான பலன்களைக் காண பொறுமை மற்றும் நம்பிக்கையான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும். இன்று அதிகப் படியான பணிகள் காணப்படும். நீங்கள் பணிகளை ஒழுங்குபடுத்தி அதன்படி திட்டமிட வேண்டும்.
ரிஷபம்…
இன்று நன்மையான பலன்கள் கிடைக்கும். வாழ்வின் நன்மை தீமை உணர்வதற்கான அனுபவ அறிவை உணரும் நாள். நற்பலனகள் காண சுமூகமான உறவை பராமரிப்பது நல்லது. பணியிடத்தில் சவால்கள் நிறைந்திருக்கும். என்றாலும் நீங்கள் இதனை சமாளித்து நற்பெயர் பெறுவீர்கள். வளர்ச்சி காண நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.
மிதுனம்…
இன்று முன்னேற்றகரமான பலன்கள் கிடைக்கும் நாள். உங்களிடம் இன்று ஆற்றலும் உற்சாகமும் நிறைந்திருக்கும். அதனால் உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இன்று அனைத்து விதத்திலும் வெற்றி கிடைக்கும் நாள். இன்று புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இதனால் நீங்கள் மிகவும் உற்சாகமாக இருப்பீர்கள். நீங்கள் உங்கள் பணிகளை விரும்பி மேற்கொள்வீர்கள்.
கடகம்…
இன்று சாதகமான பலன்கள் கிடைக்காது. உங்கள் இலக்குகளை அடைய நீங்கள் முழு முயற்சி எடுக்க வேண்டும். விரைவாக செயலாற்றுவதை தவிர்ப்பதன் மூலம் பாதகமான சூழ்நிலையை தவிர்க்கலாம்.ஆன்மீக ஈடுபாடு உங்களுக்கு ஆறுதலை அளிக்கும். பணியிடத்தில் உங்கள் அன்றாட பணிகளை கவனமுடன் கையாள வேண்டும். இன்று பணிகள் அதிகமாக காணப்படும்.
சிம்மம்….
இன்று விருப்பமான பலன்களை அடைய நீங்கள் திட்டமிட்டு செயலாற்ற வேண்டும். இன்று உங்கள் செயல்களில் திருப்தி காண்பீர்கள். மந்திர ஜெபம் மற்றும் பிரார்தனை மூலம் நீங்கள் மன ஆறுதல் பெறலாம். பணியிடத்தில் நீங்கள் சிறந்த பலனைக் காண முறையாக திட்டமிட வேண்டும். அனுசரித்துப் போவதன் மூலம் பலன் பெறலாம்.
கன்னி…
இன்று உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். அதனால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். முக்கிய முடிவுகள் எடுப்பது இன்று உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். உங்கள் பணியில் மிகுந்த திருப்தியை உணர்வீர்கள். உங்கள் மேலதிகாரிகளின் நல்லாதரவு பெரும் வாய்ப்பு உள்ளது.
துலாம்…
இன்று வெற்றிகரமான பலன்கள் கிடைக்கும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். முக்கிய முடிவுகள் நல்ல பலன்களை பெற்றுத் தரும். உங்கள் பணியின் மூலம் நீங்கள் பல நற்பலன்களைக் காணலாம் பணியிடச் சூழல் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்களின் சகஜமான அணுகுமுறை காரணமாக உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வை பராமரிப்பீர்கள்.
விருச்சிகம்….
இன்று நீங்கள் உங்கள் உணர்வுகளையும் உணர்சிகளையும் கட்டுபடுத்த வேண்டும். இன்று நன்மையான பலன்கள் காண நீங்கள் பொறுமையுடனும் நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும். இதன் மூலம் உங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். இன்று பணிகள் அதிகமாக காணப்படும். உங்கள் பணிகளை கவனமாக மேற்கொள்ள நீங்கள் சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க நேரலாம். உங்கள் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்காது.
தனுசு…
இன்று வளர்ச்சி நோக்கி செயலாற்ற உகந்த நாள். உங்கள் இலக்குகளில் வெற்றி அடைய நீங்கள் உங்கள் புத்திசாலித்தனம் மற்றும் திறமையை பயன்படுத்துவீர்கள். இன்று முழுவதும் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பணி தொடர்பான பயணம் காணப்படுகின்றது. உங்கள் பணிகளை குறித்த நேரத்திற்கு முன்பே முடித்து விடுவீர்கள்.
மகரம்….
இன்று மிகவும் துடிப்பான நாளாக அமையும். உங்கள் இலக்குகளை எளிதில் அடைவீர்கள். உங்களின் உறுதியான போக்கு மற்றும் மன உறுதி மூலம் வெற்றி காண்பீர்கள். சக பணியாளர்கள் உதவிகரமாகவும் ஆதரவாகவும் இருப்பார்கள். நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள். உங்கள் திறமைகளை நிரூபிப்பீர்கள்.
கும்பம்…
இன்று முடிவுகள் எடுக்கும் போது அமைதியும் கட்டுப்பாடும் தேவை. எந்த செயலையும் செய்வதற்கு முன் நன்றாக யோசிக்க வேண்டும்.அனுசரனையான அணுகுமுறை நன்மை அளிக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க இயலாது. அதிகப் பணிகள் சுமையாக இருக்கும்.
மீனம்…
உங்கள் துணையிடம் அகந்தைப் போக்கை தவிர்ப்பது நல்லது. அகந்தைப் போக்கு உறவில் மகிழ்ச்சியை ஏற்படுத்தாது. இன்று அதிக செலவுகள் செய்ய நேரலாம். சிக்கனம் கடைபிடிக்க வேண்டும். உங்கள் செலவுகளில் கட்டுப்பாடு தேவை. சிறப்பான ஆரோக்கியத்திற்கு முறையான உணவுமுறையை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். ஆன்மீக ஈடுபாடு காரணமாக மன அமைதி கிடைக்கும். இது உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்