Skip to content
Home » இன்றைய ராசிபலன்.. (04.01.2025)

இன்றைய ராசிபலன்.. (04.01.2025)

சனிக்கிழமை.. (04.01.2025)

மேஷம்…. 

இன்றைய நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவீர்கள். உங்களிடம் வெற்றி பெறவோம் என்ற உறுதி உள்ள காரணத்தால் நீங்கள் வெற்றியை எளிதில் அடைவீர்கள். உங்கள் பணிகளை நீங்கள் மகிழ்ச்சியாக செய்வீர்கள். பொதுவான விஷயங்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் சக பணியாளர்களிடம் ஒத்த உணர்வுகளை அனுபவிக்க இயலும்.

ரிஷபம்…

உங்கள் திறமைகளை வெளிபடுத்த உகந்த நாள். முக்கிய முடிவுகள் எடுக்க சிறந்த நாள். இன்றைய நாளை சிறப்பாக பயன் படுத்திக்கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் பணிகளை திறமையாக கையாள்வீர்கள். புதிய வாய்ப்புகள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. உங்கள் முயற்சிக்கு பலன் கிடைக்கும். நீங்கள் சிறப்புடன் பணியாற்றுவீர்கள்.

மிதுனம்.. 

எதிர்மறை எண்ணங்களை விலக்கி நேர்மறை எண்ணங்களை மேற்கொள்ள வேண்டும். நம்பிக்கையுடன் செயல்பட்டால் உங்கள் இலக்குகளில் வெற்றி காணலாம். வறான புரிந்துணர்வு காரணமாக சக பணியாளர்களுடன் தகவல் தொடர்பில் பிரச்சினை காணப்படும். இது உங்கள் பனியின் வளர்ச்சியை பாதிக்கும்.

கடகம்

இன்று தவறுகள் செய்ய வாய்ப்புள்ளதால் புத்திசாலித்தனத்துடன் உங்கள் செயல்களை மேற்கொள்ளவேண்டும்.பொறுமையும் உறுதியும் இன்று குறைந்து காணப்படும். இந்தப் பண்புகளை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். பணியிடச் சூழல் சிறப்பாக இருக்கும்.நீங்கள் பணியில் தவறுகள் செய்வீர்கள். இதனால் மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். இன்று நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும். கடுமையான செயல்கள் மற்றும் உணர்ச்சி வசப்படுவதன் மூலம் உறவில் நல்லிணக்கம் பராமரிக்க இயலாது.

சிம்மம்..

தொலை தூர நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். அதிக பயணங்கள் மேற்கொள்வீர்கள். சக பணியாளர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். பணியில் உங்கள் முயற்சிக்கு நற்பெயர் பெறுவீர்கள்.  உங்கள் துணையுடன் இனிமையான வார்த்தைகளை பகிர்ந்து கொள்வீர்கள். இதனால் உங்கள் துணையின் அன்பைப் பெறுவீர்கள்.

கன்னி … 

இன்று நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி நற்பலன் காணுங்கள். நீங்கள் பொறுப்புடனும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றுவீர்கள். உங்கள் புரிந்துணர்வு சக்தி மூலம் நீங்கள் கடினமான பணிகளையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். உங்கள் துணையிடம் மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருப்பீர்கள். உங்கள் சமயோஜித புத்தியும் நேர்மறை எண்ணங்களும் இந்தச் சூழ் நிலையை உருவாக்கித் தரும்.

 

துலாம்… 

உங்கள் தினசரி செயல்களை மேற்கொள்வதில் சற்று எச்சரிக்கை தேவை. உங்கள் வெற்றிப் பாதையின் குறுக்கே பதட்டமும் ஏமாற்றமும் காணப்படும்.பணிகளை குறித்தநேரத்தில் முடிப்பது கடினமாக உணர்வீர்கள். உங்கள் பணிகளை மேற்கொள்வதில் தாமதம் காணப்படும்.  குறைவான புரிந்துணர்வு காரணமாக இன்று உங்கள் துணையுடன் சூடான வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

விருச்சிகம்..

இன்று அதிக கவலையுடன் காணப்படுவீர்கள். உற்சாகமாக இருக்க முயலுங்கள். எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்ள வேண்டும்.  உங்கள் பணிகளை முடிப்பதற்கு கூடுதல் கவனம் தேவை. அதிக பணிகள் காரணமாக பணியில் தவறுகள் நேர வாய்ப்புள்ளது. திட்டமிட்டு பணியாற்ற வேண்டும்.

தனுசு.. 

சுய முயற்சி மூலம் நீங்கள் உங்கள் இலக்குகளை அடையலாம். எந்த செயலையும் நம்பிக்கையுடன் செய்யுங்கள். பணியிடத்தில் உங்கள் மேலதிகாரிகளின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். கடின உழைப்பிற்கான பாராட்டு கிடைக்கும்.  உறவில் நல்லிணக்கம் காணப்படும். இது மேலும் வளரும். உங்கள் துணை சம்பந்தமான இன்றைய நிகழ்வுகள் உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும்.

மகரம்…

இன்று கடினமான சவால்களை சந்திக்க நேரலாம். ஆன்மீக ஈடுபாடு ஆறுதலை அளிக்கும். பணிகள் அதிகமாக காணப்படும். சில சவாலான சூழ்நிலைகளை சந்திக்க நேரும். இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும்.  உங்கள் துணையுடன் அமைதியின்மை யை உணர்வீர்கள். நீங்கள் உங்கள் துணையுடன் வெளிப்படையான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும்.

கும்பம்…. 

இன்றைய முக்கியமான விஷயங்களை வேறு நாளைக்கு தள்ளிப் போடுங்கள். சுய முயற்சியில் நீங்கள் மனப் போராட்டங்களை சந்திப்பீர்கள்.  நீங்கள் இன்று உங்கள் பணியில் தவறுகள் செய்ய வாய்ப்புள்ளது. எனவே உங்கள் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரலாம்.  உங்கள் துணையுடன் சுமூகமான உறவு காணப்படாது. குடும்பப் பிரச்சினை காரணமாக தேவையற்ற மோதல்கள் ஏற்படும்.

மீனம்…

இன்று உங்களிடம் தன்னம்பிக்கை நிறைந்து காணப்படும். உங்கள் இலக்குகளை அடைவதற்கும் உங்கள் முயற்சிகளில் வெற்றி பெறுவதற்கும் தேவையான உறுதி மற்றும் தைரியம் உங்களிடம் காணப்படும்.  பணிகளை குறித்த நேரத்திற்கு முன்பே முடித்து விடுவீர்கள். இதனால் உங்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெற முடியம்.  உங்கள் துணையுடன் இனிமையான வார்த்தைகளை பகிர்ந்து கொள்வீர்கள். இதனால் உங்கள் துணையுடன் நல்ல பிணைப்பு ஏற்படும்.