செவ்வாய்கிழமை… (17.12.2024)
மேஷம்…
உங்கள் ஆற்றலை குறைக்கும் விதத்தில் உங்கள் மனதில் அவநம்பிக்கையான உணர்வுகள் தோன்றும்.நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் செயல்பட்டால் நீங்கள் சாதகமான பலன்களைப் பெறலாம். இன்று பணிச்சுமை கடினமாக காணப்படும்.இது உங்களுக்கு கவலையை அளிக்கும்.ஆரோக்கியக் குறைபாடு காரணமாக உங்கள் பணிகளை விரைந்து ஆற்ற இயலாது.
ரிஷபம்..
இன்றைய நாளை உங்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொள்ளலாம்.உங்களின் மனநிலையின் மூலம் இது சாத்தியம்.உங்கள்நோக்கம் நிறைவேறும் வகையிலான நல்ல முடிவுகளை நீங்கள் எடுப்பீர்கள். உங்கள் மனதில் காணப்படும் உறுதி காரணமாக உங்கள் பணியில் முன்னனியில் இருப்பீர்கள்.உங்கள் மேலதிகாரிகளின் கவனத்தை ஈர்ப்பீர்கள்.
மிதுனம் ….
இன்று அதிர்ஷ்டம் குறைவாக காணப்படும் நாள்.எந்த முயற்சி எடுத்தாலும் அதை குறித்த நேரத்தில் முடிப்பது சிறிது கடினமாக இருக்கும்.நீங்கள் பிறரிடம் உரையாடும் போது கவனமாக இருக்க வேண்டும். உங்களின்பணிச்சூழல் மகிழ்ச்சி அளிப்பதாக காணப்படாது.உங்களின் கடின உழைப்பிற்காக நல்ல பெயரை பெற முடியாத சூழல் காணப்படும்.
கடகம்…
இன்று சற்று அனுகூலமற்ற நாளாக இருக்கும். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க இயலாத நிலை இருக்கும். இன்று பொறுமை அவசியம். எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்ளுங்கள். பணிகள் அதிகமாக காணப்படும். பணியிடச் சூழலில் சுமூகமான நிலை இருக்காது. சக பணியாளர்களுடனான தொடர்பில் சில பிரச்சினைகள் காணப்படும்.
சிம்மம் :
இன்று சிறந்த நாளாக இருக்கும். நீங்கள் இன்று விரைந்து செயலாற்றுவீர்கள். இதனால் திருப்தி ஏற்படும். இன்று பயணங்களால் ஆதாயம் ஏற்படும். இன்று வளர்ச்சி பெறுவது உறுதி. இன்று சிறப்பாக பணியாற்றுவீர்கள். இன்று பணியில் மும்மரமாக ஈடுபடுவீர்கள். உங்கள் பணிகளை திறம்பட மேற்கொள்வீர்கள்.
கன்னி ..
இன்று உங்களுக்கு முன்னேற்றம் எளிதில் கிடைக்கும்.சிறிதளவு முயற்சியாயினும் வெற்றி நிச்சயம்.உங்கள் திறமை வெளிஉலகத்தில் பளிச்செனத் தெரியும்.இன்று தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள்.இன்று பணிகள் மிக அதிகமாக இருப்பதைக் காண்பீர்கள்.உங்கள் திறமைகளை வெளிப்படுத்த புதிய வாய்ப்புக்களுக்கு நீங்கள் முயலலாம்.
துலாம்…
இன்று சிறந்த வளர்ச்சி காணப்படும்.உங்கள் சிறிய முயற்சியின் மூலம் பெரிய வெற்றி காண்பீர்கள்.இன்று நீங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் காணப்படுவீர்கள்.உங்கள் பணி சம்பந்தப்பட்ட முக்கியமான சந்திப்பில் நீங்கள்மூழ்கியிருப்பீர்கள்.இந்த சந்திப்பில் உங்கள் உரையாடலைக் கண்டு உங்கள் சகபணியாளர்கள் ஆச்சரியமடைவார்கள்.
விருச்சிகம்… இன்று அசௌகரியங்கள் காணப்படும்.அதற்கு உங்கள் மனஅழுத்தங்கள் காரணமாக இருக்கலாம்.மனஅழுத்தத்தைக் குறைக்க நல்ல இசையை கேட்பது திரைப்படங்கள் பார்ப்பது போன்ற பொழுது போக்கு நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளுங்கள்.மகிழ்ச்சி கிடைக்கும். உங்கள் பணிகளை சமாளிப்பது கடினமாக காண்பீர்கள்.எனவே திட்டமிட்டு பணியாற்றினால் வெற்றிக்கு வழி கிடைக்கும்.
தனுசு ….
இன்று மந்தமாக காணப்படுவீர்கள்.சுறுசுறுப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.நல்லதையே நினையுங்கள். உங்கள் பணிகளை திறமையாக ஆற்றுவதில் சில ஏமாற்றங்களோ அல்லது தடைகளோ காணப்படும்.உங்கள் சகபணியாளர்களுடனான உங்கள் தொடர்பாடல் நற்பலன்களை அளிக்காது.
மகரம்…
இன்று வெற்றிகரமான நாளாக இருக்கும்.நீங்கள்செய்யும் செயல்கள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக முடியும்.நீங்கள் நம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். உங்கள் பணிக்கு அங்கீகாரம் கிடைக்கும்.உங்கள் திறமைகள் பாராட்டைப் பெறும்.உங்கள் செயல்திறன் மூலம் உங்களுக்கு கூடுதல் நன்மைகள் கிடைக்கும்.
கும்பம்…
இன்று துடிப்பான நாளாக இருக்கும்.உங்கள் இலட்சியங்களை அடைவதற்கு உகந்த நாள்.நீங்கள் உங்களுக்கென சில செயல்களை அமைத்துக் கொண்டு அதில் வெற்றி பெறுவீர்கள்.
உங்கள் சகபணியாளர்களுடன் நல்லுறவை பராமரிப்பீர்கள்.கடினமான பணிகளைக் கூட எளிதாக செய்து முடிப்பீர்கள்.
மீனம்…. இன்று குறைந்த பலன்களே கிடைக்கும்.இன்று சில ஏமாற்றங்களைக் காண்பீர்கள்.எல்லாவற்றையும் நட்பு முறையோடு அணுகுங்கள். நீங்கள் அதிகமாக பணியாற்ற வேண்டியிருக்கும்.அது உங்களுக்கு கவலையை உண்டாக்கும்.பணியாற்றும் முறையை திட்டமிட்டுஅதற்கேற்றாற் போல செயலாற்ற வேண்டும்.