Skip to content
Home » இன்றைய ராசிபலன் – 04.12.2023

இன்றைய ராசிபலன் – 04.12.2023

இன்றைய ராசிப்பலன் –  04.12.2023

மேஷம்

 

இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளோடு ஒற்றுமையாக செயல்பட்டால் லாபம் அடையலாம். பேச்சில் நிதானம் தேவை.

 

ரிஷபம்

 

இன்று உங்களுக்கு வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படும். தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் உடனிருப்பவர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும்.

 

மிதுனம்

 

இன்று உங்களுக்கு வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். ஒரு சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். தொழில் ரீதியாக இருந்த போட்டிகள் விலகும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் சுமூகமாக முடியும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

 

கடகம்

 

இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறையும். வியாபாரத்தில் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.

 

சிம்மம்

 

இன்று உங்களுக்கு அதிகாலையிலே ஆனந்தமான செய்தி வந்து சேரும். திருமண சுப முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். பொன்பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சி தரும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

 

கன்னி

 

இன்று உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வெளியூர் பயணங்களில் வீண் பிரச்சினைகள் ஏற்படும். பேச்சில் நிதானம் தேவை. உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். பிள்ளைகள் வகையில் சுபசெலவுகள் ஏற்படும்.

 

துலாம்

 

இன்று உங்களுக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். சிலருக்கு தெய்வ தரிசனத்திற்காக தூர பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெண்களுக்கு இன்று அனு-கூலமான பலன் உண்டாகும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும்.

 

விருச்சிகம்

 

இன்று ஆரோக்கிய பிரச்சினைகள் குறைந்து உடல்நிலை சீராகும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு தெம்பை கொடுக்கும். நண்பர்களின் மூலமாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.

 

தனுசு

 

இன்று வியாபாரத்தில் சற்று மந்த நிலை இருக்கும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. உங்களின் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலங்கள் உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடும்.

 

மகரம்

 

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தாமத நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் நிதானமாக நடப்பதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

 

கும்பம்

 

இன்று உங்களுக்கு மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சிகள் நடைபெறும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் எதிர்பாராத பதவி உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நற்பலன் கிட்டும். பணவரவு சிறப்பாக இருக்கும்.

 

மீனம்

 

இன்று எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். புதிய பொருட்கள் சேரும்-.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *