இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட தினத்தை இன்று புனித வெள்ளியாக கிறிஸ்தவர்கள் அனுசரிக்கிறார்கள். உலகம் முழுவதும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி இன்று பகலில் அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள், திருப்பலிகள் நடந்தன. இயேசுநாதர் சிலுவையில் அறையப்பட்டபோது கூறிய 7 வார்த்தைகளை நினைவு கூர்ந்து திருப்பலிகள் நடந்தது.
இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இந்த நாளை கிறிஸ்தவர்கள் துக்கநாளாக கடைபிடிக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் நோன்பிருந்து இந்த திருப்பலியில் பங்கேற்றனர்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் இன்று சிறப்பு திருப்பலி நடந்தது. இதற்காக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து திருப்பலியில் பங்கேற்றனர். இதுபோல பூண்டி, திருச்சி, தஞ்சை, நெல்லை, தூத்துக்குடி, கோவை என தமிழ்நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களில் புனித வெள்ளி திருப்பலிகள் நடந்தது.
நாளை மறுநாள்(20ம் தேதி) காலையில் இயேசுநாதர் உயிர்த்தெழுந்த திருநாளான ஈஸ்டர் கொண்டாடுகிறார்கள்.
