இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் மீண்டும் அதிரடியாக சவரனுக்கு மேலும் ரூ.320 உயர்ந்துள்ளது. இதன்மூலம் தங்கம் மீண்டும் ஒரு சவரன் ரூ. 56,800 என்கிற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதேபோல் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 40 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் ரூ.7,100க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் அதிரடியாக புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.102க்கு விற்பனை செய்யப்படுகிறது. வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஆபரணத் தங்கம் விலையும், வெள்ளி விலையும் புதிய உச்சத்தை தொட்டிருப்பது, நகைப்பிரியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.