தமிழகத்தில் இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை 46,640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஆபரண தங்கம் கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் 5,830 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. ஒரு கிராம் ரூ.77.00க்கும் ஒரு கிலோ ரூ.77,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.