தமிழகத்தில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் .44,280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.25 குறைந்து ஒரு கிராம் ஆபரண தங்கம் 5,535 ரூபாய் ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் வெள்ளி விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி கிராமுக்கு 60 காசுகள் குறைந்து ரூ.77.10 எனவும், கிலோ ஒன்றிற்கு 600 ரூபாய் குறைந்து ரூ.77,100 எனவும் விற்பனையாகிறது. தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்