தமிழகத்தில் தொடர்ந்து 7வது நாளாக ஆபரண தங்கத்தின் விலை குறைந்துள்ளது. கடந்த 7 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.632 குறைந்துள்ளது. கடந்த சனிக்கிழமை 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.25 குறைந்து 5,210 ரூபாய்க்கு விற்பனை செய்யபட்டது. சவரன் ஒன்றுக்கு 200 ரூபாய் வரை குறைந்து 41,680 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டது. இதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு 90 பைசா குறைந்து 70.00 ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளி 70,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. தமிழகத்தில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 72 ரூபாய் குறைந்து 41 ஆயிரத்து 608 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 9 ரூபாய் குறைந்து ரூ.5,209ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு ஒரு ரூபாய் குறைந்து, ரூ.69.00 ஆகவும், கிலோவுக்கு ரூ.1000 சரிந்து, ரூ.69,000 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.