சட்டசபையில் இன்று (திங்கட்கிழமை) 2024-2025-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படு்கிறது. காலை 10 மணிக்கு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முதல் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறார். சுமார் 1½ மணி நேரம் பட்ஜெட் உரையை அவர் வாசிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக தேர்தல் நேரங்களில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் அறிவிப்புகள் சற்று கூடுதலாக இடம் பெற்றிருக்கும் என்பதால் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், பட்ஜெட்டுக்கு இலச்சினை நேற்று வெளியிடப்பட்டுள்ளது. “தடைகளைத் தாண்டி… வளர்ச்சியை நோக்கி” என்ற கருப்பொருள், இதில் இடம்பெற்றுள்ளது. பட்ஜெட்டுக்காக இலச்சினை வெளியிடுவது இதுவே முதல் முறையாகும்.