அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ரத்தினசாமி அவருடைய உத்தரவுப்படி அரியலூர் மாவட்டத்தில் புகையிலை தடுப்பு ஒருங்கிணைப்பு குழுவினரால் வர்த்தக நிறுவனங்களில் ஆய்வு செய்யும் போது பறிமுதல் செய்யப்பட்ட, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அழிக்கப்பட்டன. உணவு பாதுகாப்புத்துறை, சுகாதாரத் துறை, காவல் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அரியலூர் மாவட்டம் முழுதும் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 27.4 கிலோவுக்கும் அதிகமான புகையிலை பொருட்கள் மாவட்ட சுகாதார அலுவலரின் மாவட்ட மலேரியா அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, தொழில்நுட்ப நேர்முக உதவியாளர் வகீல், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பழனிச்சாமி,ராமசாமி, ரவிச்சந்திரன் காவலர் அழகேசன் ஆகியோர் முன்னிலையில் புதைத்து அழிக்கப்பட்டன.