ஸ்ரீரங்கத்தில் நிலம் வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.40 லட்சம் மோசடி….
திருச்சி, வயலுார் சாலை, அம்மையப்ப நகர், 5வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் தனலக்ஷ்மி (51) இவர் நிலம் வாங்குவதற்காக பல இடங்களில் நிலம் தேடி வந்துள்ளார். இந்நிலையில் திருவானைக்காவல், நடு கொண்டயம்பேட்டை, கரிகாலன் தெருவைச் சேர்ந்த கண்ணதாசன் என்பவர் தனலக்ஷமிடம் ஸ்ரீரங்கம் பகுதியில் அமைந்துள்ள ஒரு இடத்தை வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதை நம்பிய தனலக்ஷ்மி அவரிடம் ரூ.46 லட்சம் பணத்தை இடம் வாங்குவதற்காக கொடுத்துள்ளார். பணம் பெற்றுக்கொண்ட பிறகு கண்ணதாசன் இடமும் வாங்கித்தராமல், பெற்ற பணத்தையும் திரும்ப தராமல் ஏமாற்றியுள்ளனர். இது குறித்து தனலட்சுமி டிச.18ம் தேதி அளித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருட்டுபோன டூவீலர் மீட்பு…..
திருச்சி, மன்னார்புரம், செங்குளம் காலனியைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி (41), இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த நவ. 19ம் தேதி இவர் தன் வீட்டின் அருகே தன் இருசக்கர வானத்தை நிறுவிட்டு சென்றுள்ளார் இந்நிலையில் மறுநாள் திரும்பி வந்து பார்த்தபோது தன் இருசக்கர வாகனம் திருடு போயிருந்ததை கண்டு அதிரச்சி அடைந்தார் இது குறித்து விஜயலட்சுமி கடந்த டிச. 18ம் தேதி அளித்த புகாரின் பேரில் கண்டோண்மென்ட் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து அவரது கண்டோன்மென்ட் போலீசார் அவரது இருசக்கர வாகனத்தை பத்திரமாக மீட்டு அவரிடம் ஒப்படைத்தனர். மேலும் இருசக்கர வாகனத்தை திருடிய நபர் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு…
ஸ்ரீரங்கம், வெள்ளித்திருமுத்தம், கிராம நிர்வாக அலுவலர் ஹரிகிருஷ்ணன் கொள்ளிடம் ஆற்றங்கரை அருகே ரோந்து சென்றார். அப்போது அங்கு அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பது தெரியவந்தது இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் ஹரிகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் அங்கு சென்று சடலத்தை மீண்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
சைக்கிளில் மணல் கடத்திய 2 பேர் கைது…
திருச்சி, ஓயாமரி மயானம் அருகே உள்ள ஆற்றங்கரையோரம் மணல் திருட்டு நடப்பதாக கடந்த டிச.18ம் தேதி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டனர் அப்போது அங்கு உரிய அனுமதி பெறாமல் சைக்கிலில் வைத்து மணல் கடத்திய மலைக்கோட்டை மீனாட்சி சுந்தரம் பிள்ளை தெருவைச் சேர்ந்த வெங்கடேசன்(41) மற்றும் திருச்சி, எஸ்எஸ்காலனி, கீழ தேவதானத்தைச் சேர்ந்த மோகன் ராஜ் (25) ஆகிய 2 பேரை கோட்டை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 3 மூட்டை மணல் மற்றும் மணல் கடத்த பயன்படுத்திய 1 சைக்கில் பறிமுதல் செய்யப்பட்டது.
போலி பாஸ்போர்ட்…. கர்நாடகத்தைச் சேர்ந்தவர் திருச்சியில் கைது…
கர்நாடகா மாநிலம், பெங்களூர்,கோரமங்களா, ராஜேந்திர நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (48). இவர் கடந்த டிச.18ம் தேதி மலேசியா செல்வதற்காக திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தார் அங்கு இம்மிகிரேஷன் பிரிவு அதிகாரிக் மேற்கொண்ட சோதனையில் அவர் போலி ஆவணங்கள் சமர்ப்பித்து பிறந்த தேதி மற்றும் பிறந்த ஊர் ஆகியவற்றை மாற்றிகொடுத்து போலி பாஸ்போர்ட் பெற்றது தெரியவந்தது. இது குறித்து இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து கிருஷ்ணனை கைது செய்தனர்.