Skip to content

பஸ்சை கட்டிப்பிடித்து ஆனந்த கண்ணீருடன் ஓய்வுபெற்ற டிரைவர்…. நெகிழ்ச்சி வீடியோ…

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. வயது 60. இவர் திருப்பரங்குன்றம் அரசு பேருந்து பணிமனையில் ஓட்டுநராக பணியாற்றினார். நேற்று அனுப்பானடியில் இருந்து மகாலெட்சுமி காலனி செல்லும் பேருந்தை கடைசியாக ஓட்டி தனது பணியை நிறைவு செய்தார்.பேருந்து நிலையத்திற்குள் பேருந்தை கொண்டு சென்ற பின்னர், இருக்கையில் அமர்ந்து கொண்டு பேருந்தின் ஸ்டியரிங், பிரேக், ஆகியவற்றை முத்துப்பாண்டி கையால் தொட்டு வணங்கினார். மேலும் ஸ்டியரிங்கிற்கு பல முறை முத்தங்களை கொடுத்து பேருந்தின் மீது உள்ள அன்பை வெளிப்படுத்தினார்.

அதன் பின்னர் பேருந்தில் இருந்து கீழறங்கி வந்த முத்துப்பாண்டி பேருந்தின் முன்பகுதியில் நின்று கொண்டு பேருந்தை கட்டி புடித்துக்கொண்டு சிறிது நேரம் ஆனந்த கண்ணீர் விட்டார். பின்னர் இரு கைகளை கூப்பி பேருந்தை வணங்கினார். மேலும் பேருந்துக்கு முத்தங்களை கொடுத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ஒய்வு குறித்து ஓட்டுநர் முத்துப்பாண்டி கூறுகையில், “நான் இந்த ஓட்டுநர் தொழிலை மிகவும் நேசித்தேன். சமுதாயத்தில் எனக்கென்று ஒரு இடத்தை தந்தது இந்த பேருந்து தான்30 ஆண்டுகள்  பணி செய்து ஓய்வு பெற்றுள்ளேன். சக தொழிலார்கள் அனைவருக்கும் நன்றி, மற்றும் வாழ்த்துக்கள்” என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!