தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு ஆகியோர் வயது மூப்பு காரணமாக வரும் ஜூன் 30-ம் தேதியுடன் ஓய்வு பெறுகின்றனர். இந்தநிலையில் டிஜிபி பதவியிலிருந்து ஓய்வு பெற உள்ள சைலேந்திரபாபு டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது. தமிழக அரசு பணிகளுக்கான பணியாளர்களை டிஎன்பிஎஸ்சி தேர்வு செய்து வருகிறது. ஏற்கனவே டிஜிபி பதவி வகித்த நட்ராஜூம் ஓய்வுக்கு பிறகு டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவியில் இருந்துள்ளார். குமரி மாவட்டத்தை சேர்ந்த சசைலேந்திரபாபு 2 ஆண்டுகளாக தமிழக காவல்துறை தலைவராக உள்ளார்.
