தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தொகுதி 1 பணிகளுக்கான தேர்வு 13.7.2024 அன்று நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தேர்விற்கு தயாராகும் தேர்வர்கள் பயன்பெறும் வகையில் தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் TNPSC GROUP-I தேர்விற்கான கட்டணமில்லா முழு மாதிரி தேர்வுகள் நாளையும் (2.7.2024) மற்றும் 5.7.2024 ஆகிய நாட்களில் நடத்தப்படவுள்ளது. இத்தேர்வுகள் காலை 10 மணி முதல் பிற்பகல் விரும்பும் 1 மணி வரை நடைபெறும்.
இத்தேர்வுகளில் கலந்து கொள்ள போட்டித்தேர்வர்கள் இணையதளத்தில் https://surveyheart.com/form/66727482a9515d486f5eb548 படிவத்தை பூர்த்தி செய்து மாதிரி தேர்வு நடைபெறும் நாளன்று TNPSC GROUP 1 தேர்விற்கு விண்ணப்பித்த நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடனும் நேரில் வர வேண்டும். தேர்வு முடிந்ததும் தேர்வர்களின் மதிப்பெண் வெளியிடப்படும் மேலும் தேர்வு தொடர்பான விபரங்களை 04362-237037 என்ற தொலைபேசி எண்ணில் அலுவலக வேலைநாட்களில் தொடர்புகொண்டு அறிந்துகொள்ளலாம்.
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்த TNPSC தொகுதி 1 தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் கட்டணமில்லா முழு மாதிரி தேர்வுகளில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.