தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள், நிர்வாக இயக்குனர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு:
சென்னை சாலை போக்குவரத்து இன்ஸ்டிடியூட் கூடுதல் இயக்குனர்(கொள்முதல்) சிங்காரவேலு, மதுரை போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனராக மாற்றப்பட்டார்.
கும்பகோணம் போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் கே. எஸ். மகேந்திரகுமார், கும்மிடிப்பூண்டி சாலை போக்குவரத்து இன்ஸ்டிடியூட் கூடுதல் இயக்குனராக மாற்றப்பட்டார்.
சேலம் போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் ஆர். பொன்முடி, திருச்சி போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனராக மாற்றப்பட்டார்.
நெல்லை போக்குவரத்து கழக அதிகாரி கே. இளங்கோவன், சேலம் போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனராக மாற்றப்பட்டார்.
கும்மிடிப்பூண்டி சாலை போக்குவரத்து இன்ஸ்டிடியூட் கூடுதல் இயக்குனர் கே. தசரதன், நெல்லை போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனராக மாற்றப்பட்டார்.
இதற்கான உத்தரவை போக்குவரத்து கழக முதன்மை செயலாளர் கே. பனீந்திர ரெட்டி பிறப்பித்துள்ளார்.