தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலையை மாற்ற பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளது. இதை அறிந்த அண்ணாமலை ஏற்கனவே தான் மாநில தலைவர் போட்டியில் இல்லை என கூறி விட்டார். இந்த நிலையில் டில்லியில் இன்று பாஜக மேலிடம் நடத்திய ஆலோசனையில் தமிழக புதிய தலைவர் யார் என்பதை முடிவு செய்து உள்ளனர். இன்று டில்லியில் முகாமிட்டுள்ள நயினார் நாகேந்திரன், புதிய தலைவராக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இன்று இரவு டில்லி வரும் அமித்ஷா, நயினார் நாகேந்திரனிடம் இதுபற்றி பேசி 11ம் தேதி இதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கலாம் என கூறப்படுகிறது.
தமிழக பாஜக தலைவர் யார்? 11ம் தேதி அறிவிக்கப்படுவார்
- by Authour
