ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி முன்னேறுவதற்கான நடவடிக்கைகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டுள்ளார். இதற்காக தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் 2 வார கால பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே 6 பெரிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டார்
இந்த நிலையில் உலக பிரசித்தி பெற்ற நிறுவனமான கூகுள் நிறுவனத்துடனும் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. தமிழகத்தில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) ஆய்வகம் அமைப்பதற்காக கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. இந்த ஒப்பந்தத்தினால், நான் முதல்வன் திட்டத்தின் வழியே, செயற்கை நுண்ணறிவில் 20 லட்சம் மாணவ, மாணவிகள் திறன்களை பெற செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.