இளம் வயதிலேேயே உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார் தமிழ்நாட்டை சேர்ந்த குகேஷ். அவரது சாதனையை பாராட்டி தமிழ்நாடு அரசு சார்பில் இன்று விழா நடத்தப்படுகிறது.. மாலை 6 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் இதற்கான விழா நடைபெறுகிறது. பாராட்டு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த், கிராண்ட் மாஸ்டர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர். இந்த விழாவில் குகேஷுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.5 கோடிக்கான காசோலை வழங்கப்படுகிறது.