சென்னை ராஜ்பவனில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளை கேள்வி கேட்க வைத்து கவர்னர் ரவி பதில் அளித்து பேசியதாவது:
கவர்னர் ஒரு தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்திருந்தால் அது நிராகரிக்கப்பட்டதாக பொருள். தமிழ்நாடு அமைதியான மாநிலம் இங்கு பணியாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அரசியல் அமைப்புபடி அரசியல் அமைப்பை பாதுகாப்பதே கவர்னரின் பணி. நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக வெளிநாட்டு நிதி உதவிகள் இருந்து உள்ளது. வெளிநாட்டு நிதி உதவி மூலம் மக்கள் தூண்டி விடப்பட்டு ஸ்டெர்லைட் ஆலையை மூடிவிட்டனர்.
ஸ்டெர்லைட் ஆலை நாட்டின் 40 % காப்பர் தேவையை பூர்த்தி செய்து வந்தது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்து தான் நிதி உதவி வந்து உள்ளது.
இவ்வாறு அவர் பதில் அளித்தார்.