தமிழக கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் பாபா அபராஜித். முதல்தர கிரிக்கெட்டில் 90 ஆட்டங்களில் விளையாடி 11 சதம் உள்பட 4,571 ரன்கள் சேர்த்துள்ளார். 28 வயதான அபராஜித்துக்கும், நீச்சல் வீராங்கனையும், நடிகர் தலைவாசல் விஜயின் மகளுமான ஜெயவீணாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர்களது திருமணம் ஆகஸ்டு 20-ந்தேதி சென்னையில் நடக்கிறது. அபராஜித், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் உதவி செயலாளர் டாக்டர் ஆர்.என்.பாபாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது