Skip to content
Home » திருப்பதியில் 6 பேர் பலி- தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

திருப்பதியில் 6 பேர் பலி- தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில் நாளை சொர்க்க வாசல் திறப்பு  சிறப்பு தரிசனம்  தொடங்குகிறது. வரும் 19 ம் தேதி வரை வைகுண்ட  வாசல்  பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும். இதையொட்டி இலவச தரிசன டோக்கன் வழங்க மொத்தம் 8 இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதில் விஷ்ணு நிவாசம் பகுதியில் திருமலா ஸ்ரீவாரி வைகுண்ட துவாரா டிக்கெட் கவுன்ட்டர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு டோக்கன் வாங்க பல ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் குவிந்தனர். வரிசையில் நிற்க முடியாமல் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.  இதில் 6 பேர் பலியானார்கள்.

அவர்களில் 2 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்.   சேலத்தைச் சேர்ந்த மல்லிகா மற்றும் பொள்ளாச்சியை சேர்ந்த நிர்மலா  ஆகியோர்  பலியானார்கள்.  40க்கும் மேற்பட்டவர்கள் காயங்களுடன்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பதி எம்.ஜி.எம் கவுன்டரின் மெயின் கேட்டை முன்னறிவிப்பின்றி திறந்து விட்டதே கூட்ட நெரிசல் ஏற்பட்ட காரணம். இந்த விஷயத்தில் அலட்சியமாகச் செயல்பட்ட டி.எஸ்.பி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ்வர் தெரிவித்துள்ளார்.

திருப்பதியில் நடந்த  இந்த  சோக நிகழ்வுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்தக்   இரங்கல்  தெரிவித்துள்ளார். “திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் உட்பட அப்பாவி மக்கள் உயிரிழந்த சம்பவம் வேதனை அளிக்கிறது. இந்த எதிர்பாராத துயர சம்பவத்தில் தங்கள் உறவுகளை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விழைகிறேன்” த இவ்வாறு அதில் கூறி உள்ளேன்.