தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தலைவர் பதவியேற்றபின் முதல் முறையாக நேற்று திடீரென டில்லி புறப்பட்டு சென்றார். அங்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து 2026 தோ்தல் பணிகள் குறித்து பேசினார். இந்த நிலையில் இன்று பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்பட்டது. இந்த சந்திப்பின்போது அமைச்சர் முருகனும் உடன் இருந்தார்.
