கடைசியாக பட்ஜெட் மான்ய கோரிக்கைக்காக தமிழக சட்டமன்ற கூட்ட தொடர் கடந்த ஜூன் 20 முதல் 29-ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற்றது. பேரவை விதிகளின்படி பேரவையின் ஒரு கூட்டம் முடிவுற்றால், அடுத்த 6 மாதங்களில் அடுத்த கூட்டம் நடத்தப்பட வேண்டும். அந்த வகையில், வரும் டிசம்பர் இறுதிக்குள் சட்டப்பேரவை கூட்டம் நடத்தப்பட வேண்டும். இந்நிலையில், வரும் டிசம்பர் முதல் வாரத்தில் சட்டப்பேரவை கூட்டத்தை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிகியுள்ளது. குறிப்பாக டிச 9, 10-ம் தேதிகளில் கூட்டம் நடைபெறலாம் என கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சபாநாயகர் மு.அப்பாவு, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற 67-வது காமன் வெல்த் மாநாட்டில் பங்கேற்றுவிட்டு தமிழகம் திரும்பியுள்ளார். இரண்டு நாட்கள் அவர் முதல்வருடன் பேசி சட்டப்பேரவை கூடும் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.