தமிழ்நாடு சட்டமன்ற கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. திருக்குறள் வாசித்து கூட்டத்தை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் க.சொ. கணேசன், சுந்தரம், புருசோத்தமன், ரமேஷ், சண்முகம் , , முகமது கனி உள்ளிட்ட பல முன்னாள் எம்.எல்.ஏக்கள் மறைவுக்கு சபாநாயகர் இரங்கல் குறிப்புகளை வாசித்தார்.
பத்திரிகையாளர் முரசொலி முன்னாள் ஆசிாியர் முரசொலி செல்வம் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இலங்கை தமிழர் தலைவர் இரா. சம்பந்தன் மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதுபோல புதுச்சேரி முன்னாள் முதல்வர் ராமச்சந்திரன், மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாசார்யா , முன்னாள் ராணுவ தளபதி பத்மநாபன், மார்க்சிய கம்யூ. பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி , இந்திய சமூய நீதி இயக்க தலைவர் மற்றும் ஈசிஐ பிஷப் எஸ்றா சற்குணம், தொழில் அதிபர் ரத்தன் டாட்டா, தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமை செயலாளர் சங்கர் உள்ளிட்ட மறைந்த பலரின் பெயர்கள் வாசிக்கப்பட்டு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் உறுப்பினர்கள் இரண்டு நிமிடம் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர். பின்னர் இரங்கல் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது.
பின்னர் உறுப்பினர்கள் எழுந்து நின்று தீர்மானத்தை நிறைவேற்றித் தருமாறு சபாநாயகர் கேட்டுக்கொண்டார். அதன்படி அனைவரும் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர். அதைத்தொடர்ந்து இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அதைத்தொடர்ந்து ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. பழனியாண்டி கேள்விக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார்.