தமிழ்திரையுலகில் எம்.ஜிஆர், சிவாஜி உள்ளிட்ட அனைத்து பிரபல நடிகர்களுக்கும் பின்னணி குரல் கொடுத்து பாடல் பாடியவர் டிஎம். சவுந்தர்ராஜன்.10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சினிமா பாடல்களையும், 2500க்கும் மேற்பட்ட பக்தி பாடல்களையும் பாடியவர். சில சினிமாக்களில் நடித்தும் இருக்கிறார். மதுரையில் பிறந்த டிஎம் சவுந்தர்ராஜனுக்கு இப்போது 100 வயது நிறைவடைந்துள்ளது. இதையொட்டி சென்னை மந்தவெளிப்பாக்கத்தின் மேற்கு வட்ட சாலையின் பெயர் டி.எம்.சவுந்தரராஜன் சாலை என மாற்றப்பட்டுள்ளது.
வரும் 24ம் தேதி டி.எம்.சவுந்தரராஜனின் 100 வது பிறந்த தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு சென்னை மாநகராட்சி இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.