ஜி.கே. வாசன் தலைமையிலான தமாகா பாஜக கூட்டணியில் உள்ளது. ஜிகே. வாசன், பாஜக சார்பில் அதிமுகவுடன் கூட்டணி பேச்சும் நடத்தினார். இந்த நிலையில் தற்போது தமாகாவுக்கு சீட் ஒதுக்குவதில் பாஜக கூட்டணியில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக இன்று ஜி.கே. வாசன், கமலாலயத்தில் பேச்சுவார்த்தைக்கு சென்றார். நேற்று வந்த பாமகவுக்கு 10 தொகுதி கொடுத்து இருக்கிறார்கள், சேலத்தில் நடந்த கூட்டத்தில் மோடி மூப்பனாரை புகழ்ந்து பேசினார். எனவே கேட்டது கிடைக்கும் என்ற நினைப்பில், தங்களுக்கு 4 தொகுதி கொடுங்கள் என 4 விரல்களை விரித்து காட்டினாராம். அப்போது பாஜக சார்பில் 2 விரல்களை மடக்கிக்கொள்ளுங்கள் என்றார்களாம். உங்களுக்கு ஒரு தொகுதி் தான் ஒதுக்க திட்டமிட்டு இருந்தோம். ஆரம்பம் முதல் நீங்கள் இருப்பதால் 2 தொகுதி தரலாம் என நினைக்கிறோம் என்றார்களாம்.
இதனால் அதிர்ச்சி அடைந்த வாசன் பேச்சுவார்தையில் இருந்து வெளியே வந்தார். நாளை பேசுவோம் என கூறிவிட்டு வந்து விட்டார். வாசன் நிருபர்களிடம் கூறும்போது எங்கள் பேச்சுவார்த்தை இன்னும் இறுதியாகவில்லை, சுமூகமாக நடக்கிறது என்று கூறினார்.