கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார், இவர் சட்டமன்ற தேர்தலில் கனகபுரா தொகுதியில் போட்டியிட்டார். வெற்றி பெறும் நிலையில் உள்ளார். இவர் கர்நாடக முதல்வர் போட்டியிலும் உள்ளார். இந்த நிலையில் நேற்று மதியம் டிகே சிவகுமார், ஹெலிகாப்டரில் தனது மனவைியுடன் திருவண்ணாமலை வந்தார். அருணை பொறியியல் கல்லூரி ஹெலிபேடில் அவரது ஹெலிகாப்டர் இறங்கியது.
டி.கே. சிவக்குமாரை, அருணை பொறியியல் கல்லூரி தலைவர் கம்பன்( அமைச்சர் எ.வ. வேலு மகன்) வரவேற்றார். பின்னர் டி.கே. சிவக்குமார், மனைவியுடன் காரில் திருவண்ணாமலை அருணாசலஸே்வரர் கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டார். தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறவும், தனக்கு முதல்வர் பதவி கிடைக்க வேண்டும் என்றும் அவர் வேண்டிக்கொண்டதாக கூறப்படுகிறது.