திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை 9.45 மணி அளவில் ஓரளவு ஊழியர்கள் பணியில் இருந்தனர். அப்போது திடீரென பயங்கர சத்தம் கேட்டது. கட்டிடம் இடிந்தது போன்ற உணர்வில் பயந்து போன ஊழியர்கள் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து இறங்கி ஓடினர். இந்த சத்தம் கலெக்டர் அலுவலகத்தை சுற்றி உள்ள கிராமங்களிலும் கேட்டது.
இந்த சத்தத்திற்கான காரணம், நிலநடுக்கமாக? இருக்கலாம் என கூறப்பட்டது. ஆனால் அதிகாரிகள் தரப்பில் நிலநடுக்கம் என்பதை உறுதி செய்யவில்லை. சிலர் ராணுவ பயிற்சி விமானம் தாழ்வாக பறந்ததால் சத்தம் கேட்டதாக கூறினார்கள். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்கள் பரப்பப்படுகிறது.