நாகை, திருவாரூர் மாவட்டங்களில் நேற்று இரவு பரவலாக கனமழை பெய்தது. முக்கிய இடங்களில் மழை கொட்டியது. இன்று காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில் முக்கிய இடங்களில் பெய்த மழை அளவி மி.மீட்டரில் வருமாறு: திருவாரூர் 33, நன்னிலம் 59.2, குடவாசல் 39.2, வலங்கைமான் 16.4, மன்னார்குடி 25, நீடாமங்கலம் 47.7, பாண்டவையாறு 36.8, திருத்துறைப்பூண்டி 49.6, முத்துப்பேட்டை 28.6
மாவட்டத்தில் மொத்தம் 335.5 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. சராசரி மழை அளவு 37.27 மி.மீ.