திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த ஆள்காட்டிவெளி என்ற பகுதியை சேர்ந்தவர் கணேசன்(61) விவசாயி. இவர் இன்று காலை வீட்டுக்கு பின்புறம் இறந்து கிடந்தார். உடலில் எந்த காயங்களும் இல்லை. தகவல் அறிந்ததும் எடையூர் போலீசார் வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கணேசன் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக கணேசனின் மனைவி மற்றும் மகனிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.