Skip to content

ஜல்லி, எம். சாண்ட் விலையேற்றம்- திருவாரூரில் கட்டுமான சங்கத்தினர் உண்ணாவிரதம்

  • by Authour

கட்டிடம் கட்டுவதற்கு தேவையான ஜல்லி மற்றும் எம்-சாண்ட் போன்றவற்றை திடீரென எந்தவித முன்னறிவிப்பின்றி  இருமடங்கு விலையேற்றப்பட்டதை  கண்டித்தும், மாநிலம்  முழுவதும் ஒரே விலையில் ஜல்லி, எம்.சான்ட் வழி வகை செய்ய வேண்டும், ட்ரான்சிட் பாஸ் ரத்து செய்ய கோரியும் திருவாரூர்  பஸ் நிலையம் அருகே இன்று   உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.

தமிழ்நாடு அரசு ஒப்பந்தகாரர்கள், அகில இந்திய கட்டுமான சங்கம், கட்டுமான பொறியாளர் சங்கம் கூட்டமைப்பு மற்றும் கட்டுமான தொழிலாளர் சங்கம் மற்றும் லாரி உரிமையாளர் சங்கம் சார்பில்  நடக்கும் இந்த  உண்ணாவிரதத்தில்  ஏராளமானோர் பங்கேற்றனர்.

ஒரு யூனிட் ஜல்லி 2500 ரூபாய் விற்று வந்த நிலையில் தற்போது 4000 ரூபாய்க்கும் எம் சாண்ட் 4000 ரூபாய்க்கு விற்று வந்த நிலையில் தற்போது 6000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது மேலும் புதுக்கோட்டை ஜல்லி எம் சாண்ட் உற்பத்தி நிறுவனங்கள் உயர்த்தப்பட்ட விலையில் இருந்து 20 சதவீதம் குறைத்துள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளன. முழுமையாக விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்.மேலும் டிரான்சிட் பாஸ் முறையை ரத்து செய்திட வேண்டும் மேலும் எம் சான்று உள்ளிட்ட பொருள்களின் விலை உயர்வு காரணமாக கட்டுமான தொழில்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது,  தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு இழந்து உள்ளனர்.

தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. உடனடியாக தமிழக அரசு கட்டுமான தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!