திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் நடைபெறும் ஆழித்தேரோட்ட விழாவுக்கு அடுத்தபடியாக இங்கு கமலாம்பாள் ஆடிப்பூர உற்சவ பெருவிழா நடைபெறும். கமலாம்பாள் ஆடிப்பூர உற்சவ பெருவிழாவானது ஆண்டுதோறும் கொடியேற்றதுடன் துவங்கி நடைபெறும் நிலையில் நடப்பாண்டிற்கான இந்த விழாவானது நேற்று முன்தினம் (29ம் தேதி) கொடியேற்ற நிகழ்ச்சி துவங்கியது. இந்நிலையில் அன்று முதல் கமலாம்பாள் வீதியுலா காட்சி, தினந்தோறும் நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கமலாம்பாள் தேரோட்டம் அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 6ம் தேதி மாலை 4 மணியளவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தேர் கட்டுமான பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
ஏற்பாடுகளை கோயிலின் பரம்பரை அறங்காவலர் ராம்விதியாகராஜன், உதவி ஆணையர்கள் ராணி மற்றும் ராமு, செயல் அலுவலர் அழகியமணாளன் மற்றும் அலுவலர்கள் செய்து உள்ளனர். கமலாம்பாள் ஆடிப்பூர விழாவானது நேற்று முன்தினம் (29ம் தேதி) கொடியேற்ற நிகழ்ச்சியுடன் துவங்கியது. அன்று முதல் கமலாம்பாள் வீதியுலா காட்சி தினந்தோறும் நடைபெற்று வருகிறது.