திருவானைக்காவல் அடிமனை உரிமையாளர்கள் கூட்டமைப்பினர் இன்று இந்து சமய அறநிலையத்துறை திருச்சி மண்டல இணை ஆணையர் கல்யாணியை சந்தித்து மனு அளித்தனர்.
கூட்டமைப்பின் தலைவர் எம்.மாரி(எ)பத்மநாபன் தலைமையில் செயலாளர் சந்தோஷ், ஆலோசனை தலைவர் sகலைமணி மற்றும் கவுன்சிலர் அப்பீஸ் முத்துக்குமார், பிரஸ்.வெங்கடேசன்,பாஸ்கர் ஞானமூர்த்தி,ராதாகிருஷ்ணன் தேவி ராஜா ஜெமினிரவி முருகானந்தம் கண்ணன் மற்றும் பலர் இந்த சந்திப்பின்போது உடனிருந்தனர்.
சந்திப்பு குறித்து அடிமனை உரிமையாளர் கூட்டமைப்பைச் சேர்ந்த மாரி என்கிற பத்மநாதன் கூறியதாவது:
இந்து சமய அறநிலையத்துறை ஆணையர்(18-03-2024) பிறப்பித்த உத்தரவின் பேரில் இதுநாள்வரை எந்த ஒரு பதிலும் தரவில்லை ஆகையால் இணை ஆணையரை சந்தித்து கோரிக்கை வைத்தோம் என்றார்.