கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள குள்ளக்காபாளையம் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக கஞ்சா செடிகளை வளர்த்து வருவதாக தாலுகா காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு விரைந்து வந்த போலீசார் வீட்டை ஆய்வு செய்த போது வீட்டின் முன்பு கஞ்சா செடிகள் வளர்த்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்த 13 கஞ்சா செடிகளை பறிமுதல் செய்த போலீசார் வீட்டின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் திருப்பூர் பனியன் தொழிற்சாலையில் டெய்லராக பணியாற்றி வரும் ஜே.ஜே. காலனியை சேர்ந்த ஈஸ்வரன் (52) என்பது தெரியவந்தது. மேலும் கஞ்சா செடிகளை வளர்த்து அவரது பயன்பாட்டுக்கும் மற்றவர்களுக்கு விற்பனை செய்ய முற்பட்டது தெரிய வந்தது. பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
![](https://www.etamilnews.com/wp-content/uploads/2024/06/kanja.jpg)